Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சம்பளம் போட வக்கில்லை.. தாமதத்துக்கு தனியார் நிறுவனம் சொன்ன காரணத்தை பாருங்க.. விளாசும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை சேர்ந்த நிறுவனம் உரிய நேரத்தில் ஊழியர்களுக்கு சம்பளத்தை விடுவிக்கவில்லை. ஆனால் சரியான நேரத்தில் சம்பளம் வழங்காதற்கு காரணமாக அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய இ-மெயில் தான் தற்போது அனைவரையும் டென்ஷனாக்கி உள்ளது. மேலும் அந்த இ-மெயிலை அந்த நிறுவனத்தின் நிறுவனர் தனது லிங்க் இன் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மும்பையில் ஸ்டார்ப் அப் நிறுவனத்தை நடத்தி வருபவர் பார்த். இவரது நிறுவனத்தில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். உரிய நேரத்தில் பார்த் தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. பொதுவாக சரியான தேதிக்கு சம்பளம் வழங்காவிட்டால் ஊழியர்கள் டென்ஷனாகி விடுவார்கள்.

salary employees mumbai

ஆனால், இதனை சமாளிக்க பார்த், முன்கூட்டியே தனது ஊழியர்களுக்கு இ-மெயில் அனுப்ப ரெடியானார். இதற்கான இ-மெயிலை அவர் தயார் செய்து தனக்கு தானே அனுப்பி வைத்து கொண்டார். அந்த இ-மெயிலில் அவரது நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளத்தை தாமதமாக வழங்க உள்ளதாக கூறியுள்ளார். அதேபோல், சம்பளம் தாமதமானதற்கு அவர் மன்னிப்பு கோரவில்லை. மாறாக, அவர் சம்பள தாமத்துக்கு அவர் கூறிய காரணம் அதிர வைத்துள்ளது.

இது தான் தற்போது அனைவரையும் டென்ஷனாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் லிங்க்ட் இன் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛நான் நேற்று என் ஊழியர்களுக்கு ஒரு இ-மெயில் அனுப்பினேன். அதில் சம்பள தாமதத்துக்கு வருந்துகிறேன் என்று கூறியிருந்தேன். அதேபோல், இது தாமதம் அல்ல, இது குணநலனை (Character) மேம்படுத்துவதற்கான பயிற்சி தான். ஏனென்றால் நாம் ஒரு நிறுவனம் அல்ல. மாறாக நாம் ஸ்டார்ட்அப். சம்பளம் தாமதமாக கொடுத்து உங்களுக்கு பொறுமையை கற்பிக்கிறேன்'' என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் எழுதி தனக்கு தானே அனுப்பி வைத்திருந்த ஒரு இ-மெயிலை போட்டோக பதிவிட்டு இருந்தார். அதில், ‛‛ வணக்கம் டீம், சம்பளம் இன்று கிரெடிட் ஆகாது. இதனை தாமதம் என்று ஒருபோதும் கூற முடியாது. இது பொறுமையை வளர்க்கும் நடவடிக்கையாகும். வளர்ச்சி என்பது வெறும் வருமானத்தால் மட்டுமே இருக்காது. இது காத்திருப்பதற்கான நேரம். சம்பளம் பெறுவதற்காக தொடர்ந்து தியான மனநிலையில் காத்திருப்பதற்கு நன்றி. இது வெறும் ஸ்டார்ட்அப் அல்ல. இது ஒரு அமைப்பு என்று கூறியுள்ளார்'' என்றார்.

இதனை பார்த்த பலரும் அந்த நிறுவனத்தின் நிறுவனரை கடுமையாக விளாசி வருகின்றனர். சம்பளம் போட வக்கில்லாமல் இப்படி ஒரு காரணமா? என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். அதேபோல் பலரும் அவரை கடுமையாக சீண்டி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+