உயிருக்கு தொடர் அச்சுறுத்தல்! குண்டு துளைக்காத காரை வாங்கிய சல்மான் கான்! ரேட்டை கேட்டால் அசந்துடுவீங்க!
மும்பை: தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை அடுத்து நடிகர் சல்மான் கான் ஒரு குண்டு துளைக்காத காரை வாங்கியிருக்கிறார். இதன் விலை என்ன என தெரிந்தால் அசந்து போய்விடுவீர்கள். அண்மைக்காலமாக சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பின் போது, மானை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது குற்றம்சாட்டப்பட்டது. 1998ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் 2018ஆம் ஆண்டு சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் சல்மானுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது. சல்மான் கான் முன்னணி நடிகராக இருந்து வரும் நிலையில் அவருக்கு சில ஆண்டுகளாகவே கொலை முயற்சி சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதனால் அவர் வெளியே சென்றாலே குண்டு துளைக்காத காரில்தான் செல்கிறார். தனது வீட்டிலும் குண்டு துளைக்காத கண்ணாடிகளை பொருத்தியுள்ளார். அது போல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றாலும் அவர் தனக்கு பாதுகாப்பாக, சொந்தமாக guard-களை வைத்துள்ளார்.
மும்பை போலீஸும் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் தனக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை உணர்ந்த சல்மான் கான் மேலும் ஒரு குண்டு துளைக்காத காரை வாங்கியிருக்கிறார்.
இந்த கார் மெர்சிடஸ் மேபச் ஜி.எல்.எஸ்.600 என்ற அந்த காரின் விலை ரூ 3.40 கோடியாம். இந்த கார் மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். இதில் தானியங்கி கியர் பாக்ஸ் வசதியும் உள்ளது. இந்த காரில் 4.0 லிட்டர் இரட்டை டர்போ வி8 என்ஜின் மற்றும் 48வி மைல்ட் ஹைபிரிட் அமைப்பும் கொண்டுள்ளது. இதில் 9 வகையான வேக கட்டுப்பாடுகள் உள்ளன.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து சல்மானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதில் 11 பாதுகாப்பு படையினரும் ஓரிரு கமாண்டோக்களும் இரு தனி பாதுகாப்பு படையினரும் இருப்பர்.
சல்மானின் காரின் முன்பும் பின்பும் இரு கார்கள் பாதுகாப்புக்காக பயணிக்கும். கடந்த ஜனவரி மாதம் சல்மான் கான் வசிக்கும் காலக்ஸி அபார்ட்மென்ட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் அவருடைய பால்கனியும் குண்டு துளைக்காத வகையில் மாற்றப்பட்டது. துல்லியமாக படம் பிடிக்கும் நவீன கேமராக்களும் அவரது வீட்டை சுற்றி பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சல்மான் கான் வீட்டை நோக்கி மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பீஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது. இந்த வழக்கில் பிடிபட்ட குற்றவாளி, போலீஸ் கஸ்டடியில் இருந்த போது தற்கொலை செய்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சல்மானுக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் "வீடு புகுந்து சல்மான் கானை வெட்டுவோம்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து வோர்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதையடுத்து மே 20ஆம் தேதி, சல்மான் கானின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக சட்டீஸ்கரை சேர்ந்த ஜிதேந்திர குமார் என்ற 23 வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அது போல் சில வாரங்களுக்கு முன்பு இஷா சப்ரா என்ற பெண் அத்துமீறி, சல்மானின் வீட்டிற்குள் நுழைய பார்த்தார். இத்தனை அச்சுறுத்தல்கள் இருப்பதை அடுத்து அவர் புல்லட் ப்ரூப் காரை வாங்கியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications