சேனாவுடன் கூட்டணி-.உ.பி. பாடத்தை மறந்துவிட கூடாது: காங்.க்கு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது; உத்தரப்பிரதேசத்தில் ஏற்கனவே கற்ற பாடத்தை மறக்கவும் கூடாது என காங்கிரஸ் மேலிடத்துக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி இணைந்து கூட்டணி அரசு அமைவது உறுதியாகி உள்ளது. இது தொடர்பான டெல்லி பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன.

இதனையடுத்து நாளை முதல் மும்பையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன. ஓரிரு நாட்களில் இம்மூன்று கட்சிகளும் இணைந்து மகாராஷ்டிராவில் புதிய அரசை அமைக்கும் என கூறப்படுகிறது.
இந்த புதிய கூட்டணிக்கு தொடக்கம் முதலே மூத்த காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கடுமையாக எதிர்த்து வருகிறார். சிவசேனாவின் மூத்த தலைவராக இருந்து பின்னர் காங்கிரஸில் இணைந்தர் சஞ்சய் நிருபம்.
சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸுக்கு பேரழிவுதான் என ஏற்கனவே எச்சரித்திருந்தார் சஞ்சய் நிருபம். இன்றும் மும்பையில் செய்தியாளர்களிடம் சஞ்சய் நிருபம் கூறியதாவது:
உத்தரப்பிரதேசத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்தது காங்கிரஸ். அப்போது ஏற்பட்ட பின்னடைவில் இருந்து இன்னமும் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் மீண்டு வர முடியவில்லை.
மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைத்தால் நிச்சயம் இங்கேயும் அதேபோன்ற ஒரு நிலைதான் வரும். உத்தரப்பிரதேசம் கற்றுக் கொடுத்த பாடத்தை மறந்துவிடக் கூடாது. அதனால்தான் தொடர்ச்சியாக இந்த எச்சரிக்கையை விடுக்கிறேன். இவ்வாறு சஞ்சய் நிருபம் கூறினார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications