இந்துத்துவா பாதையை நோக்கி? உலகிலேயே மிக உயரமான காவி கொடியை ஏற்றிய சரத்பவார் கட்சி!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பேரன் ரோஹித் பவார், உலகிலேயே மிக உயரமான காவி கொடியை ஏற்றி வைத்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார். மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் மென்மையான இந்துத்துவா பாதையை தேசியவாத காங்கிரஸ் தேர்வு செய்கிறதா? என்கிற கேள்வியையும் இது எழுப்பி இருக்கிறது.
தேசியவாத காங்கிரஸ் 2 ஆண்டுகளுக்கு முன்னரே காவி கொடியையும் தமது கட்சியாக பயன்படுத்துவோம் என அறிவித்தது. கட்சிக்கு என தனி கொடியாக இருந்தாலும் காவி கொடியை நாங்களும் பயன்படுத்துவோம் என்றது. தற்போது மகாராஷ்டிராவில் இந்துத்துவா இயக்கமான சிவசேனாவும் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ளது தேசியவாத காங்கிரஸ். இந்த நிலையில் தாங்களும் இந்துக்களுக்கான கட்சி என்ற அடிப்படையில் காவி கொடியை கையில் எடுத்திருக்கிறது தேசியவாத காங்.

சரத்பவாரின் பேரனும் காவி கொடியும்
சரத்பவாரின் பேரன் ரோஹித் பவார், கடந்த மாதம் தமது கார்ஜட்-ஜாம்கெத் தொகுதியில்தான் உலகிலேயே மிக உயரமான காவி கொடியை ஏற்றி இருந்தார். 90 கிலோ எடையுள்ள இந்த காவி கொடி 18 டன் எடை கொண்ட 74 மீட்டர் உயரமான கொடி கம்பத்தில் ஏற்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அரசியல் பார்வையாளர்கள், மென்மையான இந்துத்துவா பாதையை நோக்கி பயணிப்பதற்கான சோதனை முயற்சியாக இதனை தேசியவாத காங்கிரஸ் செய்திருக்கலாம். இன்னொரு பக்கம் மகாராஷ்டிராவில் இன்றளவும் உணர்வுகளை கிளறிவிடக் கூடிய வீர சிவாஜியின் வழிவந்தவர்கள் என்பதை வாக்காளர்களிடம் ஆழப் பதிய வைப்பதற்கான நடவடிக்கையாகவும் இதனை பார்க்கலாம் என்கின்றனர். வீர சிவாஜி கி.பி.1674-ல் மகுடம் சூட்டினார். அதனைக் குறிக்கும் வகையில்தான் 74 அடி உயர கொடி கம்பத்தை தேர்வு செய்திருக்கிறார்களாம்.

யாரும் உரிமை கொண்டாட முடியாது
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரோஹித் பவார், முதல்வர் உத்தவ் தாக்கரே ஏற்கனவே நியோ இந்துத்துவா சித்தாந்தம் குறித்து பேசி வருகிறார். காவி கொடி என்பது ஒரு கட்சிக்கும் சொந்தமானது கிடையாது. இந்துத்துவா சிந்தனை என்பதும் ஒரு அரசியல் கட்சிக்கு மட்டுமே சொந்தமானதாக கருத முடியாது. இந்த காவி கொடி நாட்டின் 36 மாவட்டங்களில் உள்ள 96 புனிதத் தலங்களை சென்று தரிசிக்கும். காவி கொடி என்பது தேசியவாதத்தைக் குறிக்கக் கூடியது. இதில் அரசியல் எதுவும் இல்லை என்கிறார். மேலும், இந்த காவி கொடியை நாங்கள் சுயாட்சிக்கான கொடியாக பார்க்கிறோம். வீர சிவாஜியும் சுய ஆட்சிக்காகவே போராடினார் என்றார் ரோஹித் பவார்.

மகா. உள்ளாட்சி தேர்தல்
இருப்பினும் மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சித் தேர்தல்களை மனதில் கொண்டுதான் தேசியவாத காங்கிரஸ் காவி கொடியை கையில் எடுத்திருக்கிறது எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக ரோஹித் பவாரின் தொகுதியான கார்ஜட்-ஜாம்கெத் என்பது அம்மாநில வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஜாம்கெத் வட்டாரத்தில் உள்ள கார்தா என்ற இடத்தில்தான் நிஜாம் மன்னர்களுக்கும் சிவாஜிக்கும் யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்தில் சிவாஜி தலைமையிலான மராத்தியர் படை பெரும் வெற்றியைப் பெற்றது. இதனைக் குறிக்கும் வகையில்தான் சிவ்பட்டான் கோட்டை முன்பாக இந்த காவி கொடியை ரோஹித் பவார் ஏற்றி இருக்கிறார் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பவாரின் குடும்ப அரசியல்
ரோஹித் பவாரைப் பொறுத்தவரை தேசியவாத காங்கிரஸின் இளம் முகமாக அறியப்படுகிறார். கடந்த தேர்தலில் 43,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எம்.எல்.ஏ.வானார். ரோஹித் பவார், சுப்ரியா சுலே உள்ளிட்ட பவார் குடும்பத்தின் அடுத்த தலைமுறைக்கு சரத் பவார் முக்கியத்துவம் தருகிறார் என்கிற அதிருப்தியில்தான் கடந்த தேர்தல் முடிவுகள் வெளியான போது சரத்பவாரின் சகோதரர் மகனான அஜித் பவார், பாஜகவுடன் கை கோர்த்து ஆட்சி அமைக்க முயன்று தோல்வி அடைந்த சம்பவமும் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications