சரத்பவார் அதிரடி- 5 ‘தலைகள்’ டிஸ்மிஸ்- 9 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய கடிதம்!
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல் உள்ளிட்ட 5 முக்கிய தலைவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார், அவருடன் இணைந்து அமைச்சராக பதவியேற்ற 8 எம்.எல்.ஏக்கள் மற்றும் பிரபுல் பட்டேல், சுனில் தட்கரே ஆகிய எம்.பிக்களை கட்சி தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யவும் தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 53 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மகாராஷ்டிரா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அஜித் பவார் உள்ளிட்ட 9 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திடீரென ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் ஆளும் பாஜக அரசில் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்; அவருடன் 8 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். அத்துடன் 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் அஜித் பவார் கூறியிருந்தார்.

இந்நிலையில் கட்சி தாவியவர்களை கட்டம் கட்டுதல், தகுதி நீக்கம் செய்தல் நடவடிக்கைகளை சரத்பவார் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அக்கட்சியின் செயல் தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான பிரபுல் பட்டேல், மற்றொரு எம்பியான சுனில் தட்கரே, மூத்த தலைவர்கள் சிவாஜிராவ் கர்ஜே, விஜய் தேஷ்முக், நரேந்திர ரானே ஆகியோரை டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்தார்.
மேலும் அஜித்பவார் உட்பட பாஜக அரசில் இணைந்த 9 பேரை கட்சித் தாவலுக்காக எம்.எல்.ஏக்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யவும் சபாநாயகரிடம் கடிதம் தரப்பட்டுள்ளது. அதேபோல எம்பிக்களான பிரபுல் பட்டேல், சுனில் தட்கரே ஆகியோரை தகுதி நீக்கம் செய்யவும் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications