பிரதமர் ரோட்ஷோ சென்ற எல்லா இடத்திலும் ‛இந்தியா’ கூட்டணி வெற்றி.. மோடிக்கு நன்றி சொன்ன சரத் பவார்
மும்பை: மகாராஷ்டிராவில் பிரதமர் நரேந்திர மோடி ரோட் ஷோ நடத்திய அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருக்கிறது என்றும் இதற்காக அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், கடந்த 2 தேர்தல்களை போல இந்த முறை பாஜக தனிப்பெரும்பான்மையை பெறவில்லை. இதற்கு முக்கிய காரணம் பெரிய மாநிலங்களில் பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெற்றதுதான். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் சறுக்கியதுதான்.

இம்மாநிலத்தில் ஏற்கெனவெ காங்கிரஸ்+தேசியவாத காங்கிரஸ்+சிவசேனா என மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டாக ஆட்சியமைத்திருந்தன. ஆனால், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சில எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்து சென்று பாஜகவில் ஐக்கியமாகினர். இதனால் ஆட்சி கவிழ்ந்தது. மட்டுமல்லாது சிவசேன கட்சி யாருக்கு சொந்தம் என்கிற சண்டையும் உருவானது. இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸிலிருந்த அஜித் பவாரும் பாஜகவில் ஐக்கியமானார். இக்கட்சியும் இரண்டாக உடைந்தது.
இந்த பின்னணியில்தான் மகாராஷ்டிரா மாநிலம் இந்த ஆண்டுக்கான லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது. மொத்தமுள்ள 48 தொகுதிகளையும் எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக தீவிர முயற்சி செய்தது. எனவே பிரதமர் ஏராளமான ரோட்ஷோக்களை நடத்தினர். இருப்பினும் பாஜக கூட்டணியால் 17 தொகுதிகளையும், பாஜகவால் தனியாக 9 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
மறுபுறம் காங்கிரஸ் தனியாக 13 தொகுதிகளையும் மகா விகாஸ் அகாடியின் கூட்டணியுடன் சேர்த்து 30 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்று இக்கூட்டணியின் தலைவர்களான சரத்பவார், உத்தவ் தாக்கரே மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தேர்தலில் தங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்ததற்காக நன்றி தெரிவித்தனர். மேலும், மோடி ரோட் ஷோ சென்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக கூறி, அவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
சரத்பவார் பேசுகையில், "பிரதமருக்கு நன்றி தெரிவிப்பது எங்கள் கடமையாகும். ஏனெனில் அவர் எங்கு பேரணி, ரோட்ஷோ நடத்தினாரோ அங்கு எல்லாம் இந்தியா கூட்டணி கட்சி பெரும் வெற்றி பெற்றது" என்று கூறினார்.
அதேபோல உத்தவ் தாக்ரே கூறுகையில், "மோடியின் முகமுடியை கழற்றியதற்காக பல யூடியூபர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தாலி குறித்து மோடி பேசியதையெல்லாம் அபத்தத்தின் உச்சம். எங்களிடமிருந்து பிரிந்து பாஜகவில் ஐக்கியமானவர்கள் மீண்டும் கட்சியில் இணைத்துப்படக்கொள்ளமாட்டார்கள்" என்று கூறியுள்ளார். அதேபோல பிருத்விராஜ் சவான் கூறுகையில், "ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியையும் கருத்தில் கொண்டு சீட் பங்கீடு குறித்து முடிவெடுப்போம்" என்று கூறியுள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications