ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றார் சரத் பவார்.. உங்கள் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது என உருக்கம்!
மும்பை : தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்திருந்த நிலையில், தனது முடிவை திரும்பப் பெற்றதாக இன்று அறிவித்துள்ளார். இது அக்கட்சித் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக சமீபத்தில் அறிவித்தார். அவரது அறிவிப்பு கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரத் பவாரின் முடிவை ஏற்க மறுத்து கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் பதவியில் இருந்து ராஜினமா செய்யக்கூடாது என அவர்கள் சரத் பவாரை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

சரத் பவாரின் விலகல் முடிவு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்திய அளவில் மதச்சார்பற்ற அணியை வலுப்படுத்துவதற்கு முக்கியமான, பெரும் தலைவர்களில் ஒருவரான சரத் பவார், தனது கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பதை மறுபரிசீலனை செய்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 18 பேர் கொண்ட கட்சியின் உயர்மட்டக்குழு இன்று கூடி ஆலோசனை மேற்கொண்டது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் ராஜினாமா முடிவை ஏற்க முடியாது என்று கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சரத் பவாரே தொடர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் இந்தத் தீர்மானத்தை பிரபுல் படேல், பி.சி. சாக்கோ உள்ளிட்டோர் சரத் பவாரை நேரில் சந்தித்து அளித்து, அவரது முடிவைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டனர். இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார், தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெற்றதாக அறிவித்தார்.

இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார், "என்சிபி தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தேன். 63 ஆண்டுகள் பொது வாழ்வில் இருந்த நான், எல்லாப் பொறுப்புகளில் இருந்தும் விடுபட விரும்பினேன். ஆனால், எனது முடிவை மக்கள் விரும்பவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் எனது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.
மேலும், மாநிலம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என்னை கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மக்களின் உணர்வுகளை என்னால் மீற முடியாது. உங்கள் அன்பு என்னை உணர்ச்சிவசப்படுத்தியது. என்சிபி உயர்மட்டக் குழுவின் முடிவு எனக்கு தெரிவிக்கப்பட்டது, அதை நான் மதிக்கிறேன். எனவே, பதவியை ராஜினாமா செய்யும் முடிவை வாபஸ் பெறுகிறேன். புதிய உற்சாகத்துடன் கட்சிக்காக பணியாற்ற உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications