இந்துத்துவ மீது எப்போதும் பிணைப்பு உண்டு: ரானே போன்ற திடீர் வரவுகள்தான் பிரச்சனை:சஞ்சய் ராவத்
மும்பை: சிவசேனாவுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் (பா.ஜ.க.) இடையே இந்துத்துவா பிணைப்பு உள்ளது; ஆனால் மத்திய அமைச்சர் நாராயணன் ரானே மாதிரி திடீரென பாஜகவுக்குள் வருபவர்கள்தான் பிரச்சனையே வருகிறது என சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சாடியுள்ளார்.
மத்திய அமைச்சர் நாராயண் ரானே, சிவசேனாவில் தனி ராஜ்ஜியம் நடத்தியதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர் காங்கிரஸுக்கும் போய் அலப்பறையை காட்டினார். பின்னர் தனிக்கட்சி தொடங்கிப் பார்த்தார். அது ஒர்க் அவுட் ஆகாத நிலையில் பாஜக ஜோதியில் ஐக்கியமானார்.

மத்திய அமைச்சராக நாராயண் ரானே
அண்மையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது நாராயண் ரானேவும் அமைச்சரானார். இந்நிலையில் மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நாராயணன் ரானே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மீதான பழைய கோபத்தை காட்டினார்.

நாராயண் ரானேவால் மோதல்
சுதந்திர தினம் பற்றி தெரியாத மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் கன்னத்தில் அறைவேன் என்றார் நாராயண் ரானே. இதனால் சிவசேனா பெரும் கொந்தளிப்பை காட்டியது. அத்துடன் நாராயணன் ரானேவையும் மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர். இந்த கைது சம்பவத்தால் பாஜக, சிவசேனா தொண்டர்களிடையே பல இடங்களில் மோதல் வெடித்தது. பின்னர் நாராயண் ரானேவுக்கு ஜாமீன் கிடைத்தது.

சிவசேனா- பாஜக உறவு
இந்நிலையில் நாராயண் ரானே தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருப்பதாவது: பாஜகவுடன் 25 ஆண்டுகாலம் கூட்டணியில் இருந்தோம். சிவசேனாவின் நிறுவனர் பால்தாக்கரே மீது மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். சிவசேனாவும் பாஜகவும் இந்துத்துவா சித்தாந்தத்தால் பிணைக்கப்பட்டவர்கள்.

நாராயண் ரானே மீது பாய்ச்சல்
இதனால் பாஜக, சிவசேனா தலைவர்களிடையே இப்படியான மோதல்கள் வெடித்தது இல்லை. சிவசேனா தலைவர்களை பாஜக தலைவர்களான தேவேந்திர பட்னாவிஸ் போன்றவர்கள் கடுமையாக வசைபாடியதும் இல்லை. சிவசேனா கட்சியினரும் இதனை கடைபிடித்து வருகின்றனர். ஆனால் நாராயண் ரானே போன்ற திடீரென பாஜகவில் இணைந்தவர்கள்தான் இப்படியான வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர். அதுதான் பிரச்சனைக்கே காரணம். இவ்வாறு சஞ்சய் ராவ்த் கூறினார்,
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications