கும்ப மேளா, பொதுக் கூட்டங்களை சுப்ரீம் கோர்ட் தடுத்திருந்தால்.. இந்த நிலை வந்திருக்காது.. சிவசேனா
மும்பை: ஹரீத்வார் கும்பமேளா மற்றும் மேற்கு வங்க தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நடந்து கொண்டிருந்தால் இன்று நாட்டில் கொரோனா பரவல் இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றிருக்காது என சிவசேனா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இரண்டாவது அலை மோசமாகி கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது.
ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெரும்பாலான நோயாளிகள் இறக்க நேரிடுகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் தடுப்பூசி மற்றும் ஆக்ஸிஜன் விநியோகம் குறித்து மத்திய அரசின் திட்டம் என்ன என உச்சநீதிமன்றம் மத்திய அரசை கேள்வி எழுப்பியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்
இந்த நிலையில் சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகையில் தலையங்கத்தில் மத்திய அரசை விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் தடுப்பூசி மற்றும் ஆக்ஸிஜன் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் நேரடியாக தலையிட்டுள்ளது நல்லது.

காலம் தாழ்த்தாமல்
எனினும் மேற்கு வங்கத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நடத்திய சாலை பொதுக் கூட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களின் பிரச்சாரக் கூட்டங்களில் சுப்ரீம் கோர்ட் காலம் தாழ்த்தாமல் தலையிட்டிருக்க வேண்டும்.

தட்டுப்பாடு
மேலும் ஹரீத்வார் கும்ப மேளாவுக்கு சென்ற பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கும்ப மேளாவை சுப்ரீம் கோர்ட் தடுத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இன்று மக்கள் இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் இறக்கிறார்கள்.

மோசம்
தலைநகர் டெல்லியிலேயே இத்தகைய நிலை என்றால் இதற்கு யார் பொறுப்பேற்பது? தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம், புதுவை ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக கொரோனாவின் இரண்டாவது அலையில் கவனம் செலுத்தியிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது.

அமைச்சரவை
நரேந்திர மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் இந்தியாவை சொர்க்க்பூமியாக மாற்ற விரும்பினார்கள். ஆனால் இன்று இந்தியாவே சுடுகாடாகிவிட்டது. கொத்து கொத்தாக இறந்தவர்களின் பிரேதங்கள் எரியூட்டப்படுவதை ஆங்காங்கே காண முடிகிறது என அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications