பீகாரில் சோலாவா 30-40 தொகுதிகளில் சிவசேனா போட்டி... டார்கெட்டே 'பாண்டே'தான்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: பீகார் சட்டசபை தேர்தலில் 30 முதல் 40 தொகுதிகளில் சிவசேனா தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. பீகாரில் காங்கிரஸ் கட்சி ஆர்ஜேடி- இடதுசாரிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது.

Shiv Sena to contest in Bihar Assembly Elections

இந்நிலையில் பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனாவும் போட்டியிடுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:

பீகாரில் வாழும் மகாராஷ்டிரா மக்கள் 50 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாங்கள் 30 முதல் 40 தொகுதிகளை தேர்வு செய்து போட்டியிட இருக்கிறோம். சர்ச்சைக்குரிய பீகார் முன்னாள் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டேவை எதிர்த்து வேட்பாளர் நிறுத்தப்படுவாரா? என்ற கேள்விக்கு பீகாரில் இருந்து பதில் தருகிறேன். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.

யார் இந்த குப்தேஸ்வர் பாண்டே?

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பீகார்- மகாராஷ்டிரா மாநிலங்களிடையே மோதலாக உருவெடுத்தது. பீகாரைச் சேர்ந்த சுஷாந்த்சிங் மரண வழக்கை விசாரித்தவர் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே. இருமாநிலங்களுக்கு இடையேயான மோதலுக்கும் காரணமாக இருந்தவர் இந்த பாண்டே. இவர்தான் சிபிஐ இந்த விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியவர்.

இப்போது சுஷாந்த்சிங் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அண்மையில் விருப்ப ஓய்வு பெற்ற இவர் ஜேடியூ சார்பில் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இதனால் இவருக்கு எதிராக சிவசேனா வேட்பாளரை களம் இறக்கும் என்றே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+