பாஜக மகாராஷ்டிராவில் பயங்கரம்! புனே பஸ் ஸ்டாண்டு..சிஸ்டர் என பேசி ஏசி பேருந்தில் பெண் பலாத்காரம்!
மும்பை: பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் பேருந்து நிலையத்தில் ஏசி பேருந்தில் இளம் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புனே பேருந்து நிலையத்தில் அதிகாலையில் நடந்த இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து தப்பி ஓடிய காமவெறியனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிராவின் புனே பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பேருந்து நிலையத்தில் அதிகாலை நேரத்தில் சத்தாரா மாவட்டம் செல்வதற்காக 26 வயது இளம் பெண் பேருந்துக்காக நீண்டநேரம் காத்திருந்தார்.

இளம் பெண் ஒருவர் நீண்டநேரமாக காத்திருப்பதை நோட்டமிட்ட காமவெறியன் ராம்தாஸ் காடே, அந்த பெண்ணிடம் சென்று 'சகோதரி' என அழைத்து எங்கே செல்ல வேண்டும் என விசாரித்திருக்கிறார். இதனையடுத்து சத்தாரா மாவட்ட பேருந்து இங்கே நிற்காது என்று கூறியதுடன் நான் அந்த இடத்தைக் காட்டுகிறேன் என பேருந்து நிலையத்தின் மற்றொரு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கே ஏசி பேருந்து ஒன்றை காட்டி அதில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள்.. சிறிது நேரத்தில் நடத்துநரும் ஓட்டுநரும் வந்துவிடுவர் என கூறியிருக்கிறார் ராம்தாஸ் காடே. இதனை நம்பி அந்த இளம்பெண்ணும் ஏசி பேருந்துக்குள் ஏறி அமர்ந்திருக்கிறார். இதன் பின்னர் சுற்றும் முற்றும் நோட்டமிட்ட ராம்தாஸ் காடே, சட்டென பேருந்துக்குள் ஏறி கதவை சாத்தியிருக்கிறார். ஏசி பேருந்து என்பதால் ஜன்னல்கள் திறக்க முடியாத நிலையில் இருந்தன. இதனை சாதகமாக பயன்படுத்தி இளம் பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறார் ராம்தாஸ் காடே.
பின்னர் அங்கிருந்து காமவெறியன் ராம்தாஸ் காடே தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து பேருந்து நிலைய கண்காணிப்பாளரிடம் அந்த இளம் பெண் முறையிட்டிருக்கிறார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் தப்பி ஓடிய நபர் ராம்தாஸ் காடே என கண்டறிந்தனர். இதனையடுத்து தலைமறைவான ராம்தாஸ் காடேவை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த இந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications