உச்சக்கட்ட ஷாக்.. 6 குழந்தைகளையும் கிணற்றில் வீசி எறிந்து கொன்ற தாய்.. அலறியபடியே உயிரிழந்த கொடுமை

6 குழந்தைகளையும் கிணற்றில் வீசி எறிந்து கொன்ற தாய் கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பெற்ற குழந்தைகள் 6 பேரையும், அடுத்தடுத்து கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்..!

பொதுவாக கல்வியறிவு பெற்ற தேசம், ஒரு முன்னேறிய தேசமாக கருதப்படும்.. எந்த ஒரு மனிதனுக்கும் சிந்திக்கும் திறனும், கேள்வி கேட்கும் உரிமையும் இருந்தாலே போதும்.. நிச்சயம் அவன் சார்ந்து வாழும் சமுதாயம் எழுச்சி பெற்றுவிடும்..!

ஆனால், வடமாநிலங்களில் அப்படி ஒரு நிலைமை இதுவரை இல்லை.. பெரும்பாலான மாநிலங்களின் கிராமங்களில் கல்வி மறுக்கப்படுகிறது.. மறக்கடிக்கப்படுகிறது.. மறைக்கப்படுகிறது..!

 மூடநம்பிக்கைகள்

மூடநம்பிக்கைகள்

அதற்கு பதிலாக, மூடநம்பிக்கைகளை அவர்கள் மீது மறைமுகமாக மற்றும் நேரடியாக திணிக்கும் போக்கும் தொடர்கிறது.. இவை எல்லாம் சேர்ந்துதான், மனிதனை சில சமயங்களில் மிருகமாக்கிவிடுகிறது.. பாட்டி, மகள், தங்கை, சிறுமி என பாகுபாடு இல்லாமல் சீரழிக்கப்படுகிறார்கள் சில கயவர்களால்.. பெண்கள் மீதான வன்முறை தாக்குதலும் இதுவரை குறைந்தபாடில்லை.. மற்றொருபுறம் சில பெண்களே, இத்தகைய வன்முறை போக்குகளில் ஈடுபட்டு வருவதும் அதிகரித்து வருகிறது.

தம்பதி

தம்பதி

அந்த வகையில், ஒரு கொடூரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.. ராய்காட் மாவட்டம், காரவலி கிராமத்தை சேர்ந்தவர் அந்த பெண்.. 30 வயதாகிறது.. இவர் கணவருடன் வசித்து வந்துள்ளார்.. இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் தம்பதிக்குள் நீண்ட காலமாகவே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.. அந்தவகையில், நேற்றும் சண்டை வெடித்துள்ளது.

 6 குழந்தைகள்

6 குழந்தைகள்

இதில் உச்சக்கட்ட வெறுப்பும் ஆத்திரமும் அடைந்த அந்த பெண், அங்குள்ள கிணற்றுக்குள் தன்னுடைய 6 குழந்தைகளையும் தரதரவென இழுத்து சென்று, அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார்.. அந்த குழந்தைகளோ அலறியபடி தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி துடிதுடித்து இறந்தே விட்டன.. அவர்கள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து அறிந்தவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.

 குழந்தைகள்

குழந்தைகள்

உடனடியாக விரைந்து சென்ற போலீசார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை ஒவ்வொன்றாக மீட்டனர்... ஆனால் அவர்கள் எல்லாருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.. ஒருவரையும் காப்பாற்ற முடியவில்லை.. நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட 5 பெண் குழந்தைகளும் அடங்கும்.. இப்படி ஒரு கொடுமையை செய்த அந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.. விசாரணையும் மேற்கொண்டனர்.

 தாயின் கோபம்

தாயின் கோபம்

அப்போது அந்த பெண் சொல்லும்போது, "வீட்டில் தகராறு ஏற்பட்டது.. அப்போது என்னை கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கினார்கள்.. இதனால் வெறுப்படைந்து, பெற்ற குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டேன்" என்று வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.. இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்..

 கோபம் பெண்

கோபம் பெண்

நம் தமிழகத்தின் புராணத்தில், "நல்லதங்காள்" என்ற ஒரு கேரக்டர் உண்டு.. வறுமை காரணமாக, பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற வரலாறு உண்டு.. ஆனால், இந்த பெண்ணோ, கோபம் உச்சிக்கு ஏறி பெற்ற குழந்தைகளை வீசி கொன்றது நாடு முழுவதுமே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.. "அதிகமாக கோபப்படுகிற பெண் நிம்மதியா வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை" என்ற ஒரு வாசகம் எவ்வளவு பொருத்தமானது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+