"ஆண்ட்டி லவ்".. முதல்ல மாமியார்.. அப்பறம் அவர்.. ஆசை ஆசையாய் கிச்சனில் நுழைந்த காஜல்.. அலறிட்டாங்களே
கணவன், மாமியாரை விஷம் வைத்து கொன்ற பெண்ணிடம் விசாரணை நடக்கிறது
மும்பை: 2 உயிர்கள் துடிதுடித்து பறிபோன நிலையில், மும்பை போலீசார் இந்த கொலைகள் குறித்த விசாரணையை துவக்கி உள்ளனர்.. என்ன நடந்தது?
மும்பை சாண்டாக்ரூசை சேர்ந்தவர் கமல்நாத்.. 49 வயதாகிறது.. இவர் ஒரு ஜவுளி வியாபாரி.. மிகப்பெரிய தொழிலதிபரும்கூட.. மனைவி பெயர் காஜல்.
இவர்களுக்கு கல்யாணம் ஆகி 22 வருடங்கள் ஆகிறது... கல்யாணம் ஆனதில் இருந்தே இவர்களுக்குள் பிரச்சனைதானாம். எப்ப பார்த்தாலும் சண்டை போட்டு வந்துள்ளார்கள்.. அடிக்கடி தகராறும் வந்து போயுள்ளது..

மாமியார்
இவர்களின் சண்டையை யாராலுமே தீர்க்க முடியவில்லையாம்.. சொந்தக்காரர்கள் தலையிட்டும், தீர்க்க முடியாமல் டயர்ட் ஆகிவிட்டார்கள்.. ஒருகட்டத்தில் காஜலே உச்சக்கட்ட வெறுப்புக்கு ஆளாகி, கடந்த 2021ல் கணவரை விட்டு பிரிந்தார்.. அந்த வீட்டை விட்டு வெளியேறி தன் மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், இந்த வருடம் மே மாதம், கணவருடன் சேர்ந்து வாழ காஜல் ஆசைப்பட்டுள்ளார்.. அதனால், மாமியார் வீட்டுக்கு கிளம்பி வந்துள்ளார்.. கடந்த ஜூன் மாதம் முதல், தம்பதி ஒன்றாக சேர்ந்து வாழ துவங்கி உள்ளனர்.. ஆனால், காஜல் நடவடிக்கையில் நிறைய மாற்றம் தென்பட்டது..

அசத்தல் சமையல்
அவர் முன்னாடி மாதிரி கிடையாதாம்.. கமல்நாத் மீது அதிக அளவு அன்பை பொழிந்துள்ளார்.. சண்டையும் போடுவதில்லை.. இதுவரை இல்லாத அளவுக்கு விதவிதமாக சமைத்து போட்டு கணவரை அசத்திவந்திருக்கிறார். கொஞ்ச நாள் பிரிந்திருந்த காரணத்தினால், கணவனின் அருமை புரிந்து இப்படி மாறிவிட்டதாக கமல்நாத்தின் அம்மாவும் பெருமை அடைந்துள்ளார்.. இப்படிப்பட்ட சூழலில், கடந்த ஜூலை மாதம் கமல்நாத்தின் அம்மா, அதாவது காஜலின் மாமியாருக்கு திடீரென வயிற்று வலி வந்துள்ளது.. மாமியார் பெயர் சரளாதேவி.. வயிறுவலியால் துடிக்கவும் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்..

உறுப்புகள்
ஆனால், அவருக்கு என்ன பிரச்சனை என்றே டாக்டர்களால் உடனே கண்டுபிடிக்க முடியவில்லையாம்.. நிறைய டெஸ்ட்கள் எடுத்துள்ளனர்.. அப்போதுதான், அப்போது சரளாதேவியின் பல உடல் உறுப்புகள் செயல்படாமல் இருந்தது கண்டறியப்பட்டது.. ஆனால், அதற்குள் சரளாதேவி இறந்துவிட்டார்.. இருந்தாலும், எப்படி ஒரே நேரத்தில் எல்லா உடல் உறுப்புகளும் பாதிக்கப்படும் என்று பலருக்கு சந்தேகம் வந்ததே தவிர, உண்மையான காரணத்தை யாராலும் கண்டறிய முடியவில்லை .

ஹெவி மெட்டல்
பிறகு, கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி, கமல்நாத்துக்கும் வயிற்று வலி வந்துவிட்டது.. தரையில் புரண்டு விழுந்து வலியால் துடித்தார்.. இதனால், சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. ஆனாலும் குணமாகவில்லை.. இதனால் பல மருத்துவமனைகளுக்கு கமல்நாத் சிகிச்சையில் அனுமதிக்கும்படி ஆகிவிட்டது.. கடைசியாக தெற்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமல்நாத் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அங்குதான் அவருக்கு உடலில் என்ன கோளாறு என்பதையே கண்டுபிடித்தார்கள்..

தாலியம்
டெஸ்ட் எடுத்ததில், ரத்தத்தில் ஹெவி மெட்டல் இருப்பது தெரிய வந்திருக்கிறது... அதாவது, அவரது ரத்தத்தில் ஆர்சனிக், தாலியம் போன்றவை அதிக அளவில் உற்பத்தி ஆகி இருப்பது தெரிய வந்திருக்கிறது . இந்த கோளாறை கண்டுபிடிக்கவே பல நாட்கள் ஆகிவிட்டது.. அதற்கு பிறகுதான சிகிச்சையே நடந்துள்ளது.. ஆனால், 17 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்நாத், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் செயலிழந்து, செப்டம்பர் மாதம் 20ம் தேதி இறந்துவிட்டார்.. இப்போதுதான் குடும்பத்தினருக்கு சந்தேகமே வந்தது..

சயனைடு
ஆனால் காஜலோ, படுகேஷூவலாக நடமாடி வந்தார்.. மாமியார், கணவர் இறந்தது பற்றி துளிகூட கவலை அவர் முகத்தில் இல்லாததை உறவினர்கள் கவனித்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, கமல்நாத்தின் ஜவுளி கம்பெனி பிசினஸில் தீவிர கவனத்தை செலுத்தினார்.. எந்திரங்களை விற்பனை செய்து வருவது, இன்சுரன்ஸ் பாலிசி புதுப்பித்து என அதிலேயே மூழ்கி கிடந்தார். இதனால், கமல்நாத்தின் சகோதரி சந்தேகப்பட்டு போலீசில் புகார் தந்தார்.. போலீசார் தங்கள் விசாரணையை ஆரம்பித்தனர்.. முதல் விசாரணையே காஜலிடம்தான் துவங்கினர். சயனைடுவை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பாட்டில் கலந்து தந்திருக்கிறார் காஜல்..

மாமியார்
அம்மா வீட்டில் இருந்தபோதே, சயனைடுவை வாங்கி தயாராக கையில் வைத்து கொண்டாராம்.. ஆனால், அதை சாப்பாட்டில் கலந்து கொடுத்தால், எப்படி வேலை செய்கிறது என்பது தெரியாததால், முதலில் மாமியாருக்கு அதை தந்து டெஸ்ட் செய்துள்ளார் காஜல்.. அதனால்தான், கிச்சன் பொறுப்பை தன்னிடம் வைத்துக் கொண்டு, விதவிதமாக சமைத்துள்ளார்.. அப்போது மாமியாருக்கு ஸ்லோ பாய்சனை கலந்துகொடுத்து, அதில் அவர் உயிரிழந்துவிடவும்தான், கணவருக்கு சயனைடு தர ஆரம்பித்துள்ளார்.

ஸ்லோ பாய்சன்
மாமியார் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டாலும்கூட, அதில் கொஞ்சம் சயனைடு கலந்துடுவாராம். தண்ணீர், இளநீர், ஜூஸ், பால் இப்படி எல்லாவற்றிலுமே ஸ்லோ பாய்சனை கலந்து கொடுத்து வந்திருக்கிறார்... இப்படி 2 உயிர்களையும் கொலை செய்வதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால், அதுதான் கள்ளக்காதல்.. காஜலின் கள்ளக்காதலன் பெயர் ஹிதேஷ் ஜெயின்.. அவரைதான் போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications