Smriti Mandhana: அவ்வளவு தான் எல்லாம் ஓவர்.. திருமணம் ரத்து செய்யப்பட்டதாக ஸ்மிருதி மந்தனா அறிவிப்பு! என்ன காரணம்
மும்பை: இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும் பலாஷ் முச்சாலுக்கும் இடையே கடந்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. ஸ்மிருதி மந்தனா தந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே பலாஷ் முச்சால் உடனான திருமணம் ரத்து செய்யப்படுவதாக ஸ்மிருதி மந்தனா அறிவித்துள்ளார்.
நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சால் திருமணம் கடந்த மாதம் நடைபெற இருந்தது. இதற்காகப் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் திருமணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருமணத்திற்குச் சில மணி நேரத்திற்கு முன்பு ஸ்மிருதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.

என்ன நடந்தது!
அதேபோல மறுநாளே பலாஷ் முச்சாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலாஷ் முச்சால் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து முதலில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், பின்னர் தனது மாமனாருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு செய்தியை கேட்டு பலாஷ் முச்சால் அழுது கொண்டே இருந்ததால் அவருக்கு நீரசத்துக் குறைபாடு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் விளக்கமளித்தனர்.
ஸ்மிருதி மந்தனா அறிவிப்பு
இதற்கிடையே ஸ்மிருதி மந்தனா உடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போதே பலாஷ் முச்சால் வேறு ஒரு பெண்ணுடன் சாட் செய்தாக சொல்லி சில வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் பரவின. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. மேலும், ஸ்மிருதி மந்தனா- பலாஷ் முச்சால் திருமணம் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் பரவியது. இந்தச் சூழலில்தான் தனது திருமணம் ரத்து செய்யப்படுவதாக கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அறிவித்துள்ளார்.
திருமணம் ரத்து
இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த சில வாரங்களாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்கள் பேசப்பட்டு வருகிறது என குறிப்பிட்ட ஸ்மிருதி மந்தனா தனிப்பட்ட விஷயங்களைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள விரும்புபவள் நான் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரம் திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன் எனக் கூறியுள்ள அவர், இந்த விஷயத்தை இத்தோடு முடித்துக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "கடந்த சில வாரங்களாக எனது வாழ்க்கை குறித்துப் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டு வருகிறது. எனவே, இந்த நேரத்தில் நான் பேசுவது அவசியம் என்று உணர்கிறேன். நான் பொதுவாகவே ஒரு பிரைவேட்டான நபர்.. பொதுவெளியில் என்னைப் பற்றிப் பேச எனக்கு விருப்பம் இல்லை. ஆனாலும், திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.
இத்தோடு விட்டுவிடுங்கள்
இந்த விஷயத்தை நான் இத்துடன் முடித்துக் கொள்ள விரும்புகிறேன். மற்றவர்களும் இந்த விஷயத்தை இத்தோடு விட்டுவிட வேண்டும் என விரும்புகிறேன். இத்தருணத்தில் இரு குடும்பங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை மதித்து, இந்தச் சூழலில் இருந்து மீண்டு வர டைம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நம் அனைவரையும் உயர் நோக்கம் ஒன்று தான் வழிநடத்துகிறது. என்னைப் பொறுத்தவரை நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதே அந்த நோக்கமாகும். முடிந்தவரை இந்தியாவுக்காக விளையாடி அதிகக் கோப்பையை வெல்ல வேண்டும். இனிமேல் நான் அதில் தான் கவனம் செலுத்தப் போகிறேன். அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications