அப்பாடா, நிம்மதி.. 9 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை-மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அறிவிப்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்த நிலையில், 9 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் அம்மாநில சுகாதாரத்துறை நிம்மதியடைந்துள்ளனர்.
Recommended Video
கொரோனாவை போல் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை வைரஸ் நோயும் உலக நாடுகளில் பரவி வருகிறது. எனினும் கொரோனாவை போல் மிக தீவிரமாக பரவும் தன்மை இல்லை என்று சொல்லப்பட்டாலும் உலக நாடுகள் முதல் மாநில அரசுகள் வரை அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறது.
இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சுகாதார நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

தமிழகத்தில் முன்னேற்பாடு
குறிப்பாக கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பக்கத்து மாநிலமான தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பை கண்டறிதவற்காக சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமிதியளித்ததையடுத்து இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குரங்கு அம்மை பரவிவரும் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாருக்கும் குரங்கு அம்மை இல்லை
குறிப்பாக அங்கிருந்து வருபவர்களின் முகம் மற்றும் முழங்கைக்கு கீழ் ஏதாவது அறிகுறி இருக்கிறதா? என்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், கடந்த மாதம் 10 பேரின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. தேசிய வைராலஜி ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பட்டு இருந்தது. முடிவுகள் வெளிவரும் வரை 10 பேரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில், 9 பேரின் சேம்பிள் முடிவுகள் வெளியாகின. இதில் யாருக்கும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை.

நிம்மதி பெருமூச்சு
10 பேருக்கு அறிகுறி இருந்த நிலையில், அவர்களுக்கு 9 பேருக்கு குரங்கு அம்மை இல்லாததால், மகாரஷ்டிர சுகாதாரத்துறை அதிகாரிகளை நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில், இது குறித்து கண்காணிப்பு அதிகாரி மருத்துவர் பிரதீப் அவதே கூறுகையில், ''இன்னும் ஒருவருடைய மாதிரியின் முடிவு மட்டும் வரவில்லை. 9 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்பது முடிவுகளின் படி தெரியவந்துள்ளது. நோய்த்தொற்று பரவல் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாட்டில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.

விவரங்கள் வெளியிடப்படவில்லை
தற்போது குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்ற முடிவுகள் வந்தாலும், சம்பந்தபட்ட 9 பேரின் அடையாளத்தை வெளியிட மகாரஷ்டிர சுகாதாரத்துறை மறுத்துவிட்டது. அவர்களை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் அவர்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications