அம்பானி வீட்டருகே வெடிகுண்டு..மத்திய அரசுக்கு இவ்வளவு ஆர்வம் ஏன்?சந்தேகத்தை கிளப்பும் உத்தவ் தாக்கரே
மும்பை: அம்பானி வீட்டருகே கண்டுபிடிக்கப்பட்ட கார் வெடிகுண்டு வழக்கு விசாரணையில் மத்திய அரசு இவ்வளவு ஆர்வம் காட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான வீடு ஒன்று மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ளது. கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அந்த வீட்டருகே முன் வெடிகுண்டுகள் நிறைந்த எஸ்யுவி கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அந்த காரில் 20 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த வழக்கை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை செய்து வருகிறது. க்ரைம் கதைகளை மிஞ்சும் வகையில் திடீர் சம்பவங்கள் இதில் நடைபெற்று வருகிறது.

கார் உரிமையாளர்
இந்த எஸ்யுவி காரின் உரிமையாளர் ஹிரென் மன்சுக் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், திடீரென்று கடந்த சில நாட்களுக்கு முன் 45 வயதான ஹிரென் மன்சுக்கின் உடல், உயிரிழந்த நிலையில் மும்பை அருகே கண்டுபிடிக்கப்பட்டு. அவரது மரணம் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது. விசாரணையில் அவர் அந்த காரின் உண்மையான உரிமையாளர் இல்லை என்பதும் அவர் அந்த காரை பராமரித்தே வந்ததும் தெரியவந்தது.

மத்திய அரசு vs மகாராஷ்டிர அரசு
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. இருப்பினும், மகாராஷ்டிர அதிகாரிகளுக்கு இந்த வழக்கை விசாரணை செய்யக் கூடிய திறமை இருப்பதாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்திருந்தார். இருப்பினும், மத்திய அரசு தொடர்ந்து தனது கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது.

இவ்வளவு ஆர்வம் ஏன்
மத்திய அரசு இந்த வழக்கு விசாரணையில் இவ்வளவு ஆர்வம் காட்டுவதைப் பார்த்தால் இதில் எதோ தவறாக உள்ளதைப் போல தெரிவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சந்தேகத்தை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவு இந்த வழக்கை விசாரித்தது வருவது அனைவருக்கும் தெரியும். விசாரணை முகமைகள் யாருக்கும் சொந்தமானது இல்லை. அரசுகள் மாறலாம், ஆனால் அமைப்புகள் மாறாது. அமைப்பை அனைவரும் நம்ப வேண்டும். மத்திய அரசு ஏன் இந்த வழக்கிற்கு இவ்வளவு ஆரவம் காட்டுவதைப் பார்த்தால் இதில் எதோ தவறாக உள்ளது" என்றார்.

சுயேச்சை எம்பி தற்கொலை
அதேபோல கடந்த சில வாரங்களுக்கு முன் மும்பையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சுயேச்சை எம்.பி. மோகன் டெல்கர் விசாரணை குறித்துப் பேசிய அவர், "அந்த வழக்கையும் நாங்கள் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கு இது குறித்துப் பேச துணிச்சல் இல்லை. ஏனென்றால் யூனியன் பிரதேசத்தில் யார் அனைத்தையும் கட்டுப்படுத்துவது என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார். பிப்ரவரி மாத இறுதியில் த்ரா & நாகர் ஹவேலி யூனியன் பிரதேச சுயேச்சை எம்.பி. மோகன் எஸ். டெல்கர் உடல் மும்பையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications