Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டேக் ஆப் போது.. கழன்று ஓடிய ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் சக்கரம்! அடுத்து நடத்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானத்திலிருந்த சக்கரம் ஒன்று கழன்று ஓடிய நிலையில், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வெளியாகியிருக்கும் நிலையில், விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

குஜராத்தின் கண்ட்லா விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் Q400 ரக டர்போப்ராப் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று மும்பை நோக்கி புறப்பட்டிருக்கிறது. விமானத்தின் வலது பக்க ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்த பயணி, டேக் ஆஃப் அனுபவத்தை வீடியோவாக ரெக்கார்ட் செய்திருந்தார்.

SpiceJet plane

ஓடுபாதையில் வேகமாக வந்த விமானம் ஒரு கட்டத்தில் டேக் ஆப் ஆனது. அந்த சமயம் பார்த்து, வலது பக்க சக்கரம் கழன்று கீழே விழுந்தது. இந்த விமானத்தில் மொத்தம் 4 சக்கரங்கள் இருக்கும். ஒரு ஜோடி இடதுபுறமும், இன்னொரு ஜோடி வலதுபுறமும் இருக்கும். இந்த வலதுபுற ஜோடியிலிருந்துதான் ஒரு சக்கரம் மட்டும் தனியாக கழன்று விழுந்திருக்கிறது. ஒரேயொரு சக்கரத்தை மட்டும் வைத்துக்கொண்டு விமானம் எப்படி தரையிறங்கும் என்று பயணிகள் அச்சமடைந்திருந்தன.

ஆனால் மும்பை விமான நிலையத்தில், விமானம் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானி சாதுர்யமாக செயல்பட்டு, விமானத்தின் மொத்த எடையையும், இடதுபுற சக்கரங்களுக்கு செல்லுமாறு செய்திருந்தார். எனவே வலதுபுறத்தில் இருந்த ஒற்றை சக்கரம் மட்டுமே, தரையிறங்க போதுமானதாக இருந்தது. விமானம் பத்திரமாக தரையிறங்கியதால் விமானி உட்பட பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "விமானம் மும்பையில் பாதுகாப்பாக மென்மையாக தரையிறங்கியது. பின்னர் எந்த உதவியும் இல்லாமல் அது முனையத்திற்குச் சென்றது. பயணிகள் அனைவரும் பத்திரமாக, பதற்றமின்றி இறங்கினர்" என்று தெரிவித்தார்.

சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கண்ட்லாவிலிருந்து வந்த விமானம் இன்று மதியம் 3:51 மணியளவில் சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. விமானம் 27வது ஓடுபாதையில் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன், அனைத்து பயணிகளும், விமான ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்" என தெரிவித்திருக்கிறார்.

விமான பயணங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது சமீப காலமாக வழக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது. இருப்பினும் விபத்துகளை தவிர்க்க, விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+