மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனி டெபிட் கார்டுகள் இருக்காது? எஸ்பிஐ செம பிளான்

Google Oneindia Tamil News

Recommended Video

    SBI plans to end debit card | டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக எஸ்பிஐ செம திட்டம்- வீடியோ

    மும்பை: இந்தியாவில் டெபிட் கார்டுகளுக்கு முடிவுரை எழுதப்பட ஆரம்பித்துள்ளதாகவே தெரிகிறது. நாட்டிலேயே பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனது டெபிட் கார்டு சேவையை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நாட்டில் வங்கி கணக்கு வைத்துள்ளோர்களில் ஐந்தில் ஒருவர் எஸ்பிஐ வங்கியில்தான் அக்கவுண்ட் வைத்து உள்ளனர். அப்படியான வங்கியே டெபிட் கார்டை நிறுத்தினால், பிற வங்கிகளும் இதே ஃபார்முலாவுக்கு தள்ளப்படும் என்பது உறுதி.

    எஸ்பிஐ சேர்மன், ரஞ்னிஷ் குமார், வருடாந்திர 'பிபாக்' நிகழ்வில் பேசுகையில், இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறியதை பாருங்கள்:

    90 கோடி

    90 கோடி

    டெபிட் கார்டுகளை அகற்ற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். அதை நாங்கள் செய்வோம் என்று கருதுகிறோம். நமது நாட்டில் 3 கோடி கிரெடிட் கார்டுகள் உள்ளன. 90 கோடி டெபிட் கார்டுகள் உள்ளன. எனவே Yono போன்ற ஆன்லைன் பிளாட்பார்ம் மூலமாக பண பரிவர்த்தனை செய்வதற்கு ஊக்கம் கொடுக்க உள்ளோம்.

    பொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது.. இத்துறைகளில் மோசமான பாதிப்பு.. ராகுராம் ராஜன்பொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது.. இத்துறைகளில் மோசமான பாதிப்பு.. ராகுராம் ராஜன்

    யோனோ கேஷ் பாயிண்ட்

    யோனோ கேஷ் பாயிண்ட்

    'யோனோ' பிளாட்பார்ம் வழியாக, ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியும், பொருள் வாங்கினால் பணம் செலுத்த முடியும். டெபிட் கார்டு இல்லாமலேயே இதை செய்ய முடியும். எஸ்பிஐ சார்பில் ஏற்கனவே, 68,000 யோனோ கேஷ் பாயிண்ட்டுகளை திறந்துள்ளோம். அடுத்த 18 மாதங்களில் இதை 10 லட்சத்துக்கும் அதிகமாக உயர்த்த உள்ளோம்.

    க்யூஆர் கோட்

    க்யூஆர் கோட்

    இதுதவிர யோனோ பிளாட்பார்ம் மூலமாக, சில வியாபாரிகளிடம் கடனும் பெற முடியும். எனவே இது கிரெடிட் கார்டு போலவும் செயல்படும். க்யூஆர் கோட் மூலமான பரிவர்த்தனையும் செலவு குறைந்த ஒரு வர்த்தக பயன்பாடு நடைமுறை. இவையெல்லாம் வருங்காலத்தில் அமல்படுத்தப்பட உள்ள அம்சங்கள். இவ்வாறு ரஞ்னிஷ் குமார் பேசினார்.

    டிஜிட்டல் நடைமுறை

    டிஜிட்டல் நடைமுறை

    நாட்டில் பணமதிப்பிழப்பு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, டிஜிட்டல் பேமென்ட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே எஸ்பிஐயும் டெபிட் கார்டு இல்லாத பரிவர்த்தனையை நோக்கி பயணிக்க தலைப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    English summary
    The end of debit cards in India seems to have begun. State Bank of India, the country's largest bank, has reportedly will discontinued its debit card service.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X