இவரையும் விட்டு வைக்கல.. ‘டீப் ஃபேக்’ பயன்படுத்தி போலி வீடியோ.. ஆதங்கத்துடன் சச்சின் வைத்த கோரிக்கை
மும்பை: டீப் ஃபேக் தொழில் நுட்பம் மூலம் சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் கேம் ஒன்றை விளம்பரப்படுத்துவதாக போலியான வீடியோ பரப்பப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு ஆதங்கப்படுள்ளார்.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ளது. இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மோசடி வேலைகளும் நடப்பது அதிகரித்துள்ளது. அதிலும் டீப் ஃபேக் எனப்படும் தொழில் நுட்ப உதவியால் பிரபலங்களின் முகத்தை தத்ரூபமாக பயன்படுத்தி ஆபாச வீடியோக்களும் போலியான தகவல்களும் பரப்பப்படுகின்றன.

பிரபலங்களின் முகத்தை ஆபாச படங்களில் வரும் பெண்களின் வீடியோவுடன் டீப் ஃபேக் எனப்படும் தொழில்நுட்பத்தின் மூலமால மார்பிங் செய்து உண்மையான வீடியோபோல பகிர்ந்து வருகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து ஆபாச போலி வீடியோ டீப் பேக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளியானது. இதற்கு ராஷ்மிகா மந்தனாவும் தனது கடும் அதிருப்தியையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.
டீப் ஃபேக் தொழில் நுட்பம்: இது போல போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்து இருந்தது. அதாவது, போலி வீடியோக்களை சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்து இருந்தது. எனினும் டீப் ஃபேக் தொழில் நுட்பம் மூலம் வீடியோக்கள் இன்னமும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
சச்சின் தெண்டுல்கர் ஆதங்கம்: அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தற்போது டீப் ஃபேக் வீடியோவுக்கு இரையாகியுள்ளார். ஒரு ஆன்லைன் கேம் தொடர்பான விளம்பரத்தில் சச்சின் டெண்டுல்கரின் குரல் மற்றும் அவரது முகம் பயன்படுத்தப்பட்டு அந்த ஆன்லைன் கேமை விளம்பரப்படுத்துவது போல வசனங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இது போலியானது என கூறியுள்ளார். இது தொடர்பாக சச்சின் கூறுகையில், "இந்த வீடியோக்கள் போலியானது. டெக்னாலஜி தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது கவலையாக உள்ளது. இது போன்ற வீடியோக்கள், விளம்பரங்கள் குறித்து அதிகளவில் புகாரளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார்.
விதிமுறைகள் கொண்டு வரப்படும்: இந்த நிலையில், இத்தகைய டீப் ஃபேக் வீடியோக்களுக்கு கடிவாளம் போட விரைவில் விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சச்சினின் எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் ராவ் கூறியிருப்பதாவது:-
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் உருவாக்கப்படும் டீப் ஃபேக் வீடியோக்கள் இந்திய பயனர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இவற்றை கட்டுப்படுத்த ஐடி சட்டத்தின் கீழ் கடினமான விதிகள் கொண்டு வரப்படும். சமூக ஊடக தளங்களும் 100 சதவிகிதம் இதை பின்பற்றி நடக்க வேண்டும்" என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications