என் பெண் புலியே! உனக்காக 9 நாட்கள் நான் விரதம்.. ஜாக்குலினுக்கு சிறையிலிருந்து சுகேஷ் காதல் கடிதம்
மும்பை: நவராத்திரிக்காக நான் 9 நாட்கள் விரதம் இருக்கிறேன் என நடிகை ஜாக்குலினுக்கு சிறையில் இருந்தபடியே சுகேஷ் சந்திரசேகர் காதல் கடிதம் எழுதியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ள திகார் சிறையில் உள்ளார். இந்த நிலையில் அவர் சிறையிலிருந்தபடியே டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் 200 கோடி பணத்தை மோசடியாக பெற்றதாக சுகேஷ் மீண்டும் கைதாகியுள்ளார்.

இந்த நிலையில் பண மோசடி வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணை நடத்தப்பட்டது. சுகேஷும் ஜாக்குலினும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாக்குலினுக்கு சுகேஷ் முத்தம் கொடுக்கும் புகைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாதங்களில் எடுத்திருக்கலாம் என தெரிகிறது. ஏனெனில் அந்த காலகட்டத்தில்தான் இரட்டை இலை வழக்கில் சுகேஷ் ஜாமீனில் இருந்தார்.
சிறையில் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு ரூ 10 கோடி வரை பரிசுப் பொருட்களை சுகேஷ் வாங்கிக் கொடுத்ததாகவு்ம தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ரூ 500 கோடிக்கு ஜாக்குலினை வைத்து படம் தயாரிப்பதாக அவரை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இத்தனை நாட்களாக போலீஸில் சுகேஷுடனான காதலையும் இதுவரை நடத்திய சந்திப்பையும் ஜாக்குலின் மறுத்துவந்தார். தற்போது ஜாக்குலினும் சுகேஷும் நெருக்கமாக இருக்கும் செல்ஃபி புகைப்படம் வைரலானது. இந்த நிலையில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
சுகேஷ் சந்திரசேகரின் குற்றப்பின்னணி தெரிந்திருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதுடன் பரிசு பொருட்களையும் பெற்றுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் ஜாக்குலினை சுகேஷுக்கு அறிமுகம் செய்து வைத்தது பிங்கி இரானி. இவர் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், ஜாக்குலினிடமும் பிங்கியிடமும் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்பதால் ஜாக்குலின் பாட்டியாலா நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் சிறையில் இருந்து கொண்டே காதலி ஜாக்குலினுக்கு சுகேஷ் கடிதம் எழுதியுள்ளார். அதில் என் பெண் புலியே பேபியே ஜாக்குலின் என தொடங்கியுள்ளார்.
பேபி தோஹா ஷோவில் நீ மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தாய். உன்னை விட வேறு யாருமே அழகி அல்ல. மை பொம்மா! பேபி நவராத்திரி நாளை முதல் தொடங்குகிறது. இதனால் என் வாழ்வில் முதல் முறையாக உன் நல்வாழ்வுக்காக நான் 9 நாட்கள் விரம் இருக்கிறேன். குறிப்பாக உன்னை சுற்றியிருக்கும் எதிர்மறை சக்திகள் விலக வேண்டும். உன்னையும் என்னையும் பார்த்து சிரித்தவர்கள் முகத்தை வெளியில் காட்ட முடியாது. உண்மை வெளியே வரும் நேரம் வந்துவிட்டது.
அம்மனின் அருளால் எல்லாமே நமக்கு சாதகமாகவே அமையும். விரைவில் நீயும் நானும் ஒன்று சேர்ந்து வாழ்வோம். நம் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிற்காது. வெற்றி நமதே என ஜாக்குலினுக்கு சுகேஷ் உருகி உருகி காதல் கடிதத்தை தீட்டியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications