ஜாக்குலின் பெர்னான்டஸின் வீக்னஸை வைத்து தந்திரமாக ஏமாற்றிய சுகேஷ்!.. என்ன சொன்னார் தெரியுமா?
மும்பை: நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் மனதில் இடம் பிடிப்பதற்காக விலையுயர்ந்த பொருட்கள், கார்கள், குதிரை மற்றும் இதர பரிசு பொருட்களை கொடுத்த சுகேஷ் சந்திரசேகர் அவரிடம் இன்னொரு வாக்குறுதியையும் அளித்து நடிகையை ஈர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
அதாவது ரூ 500 கோடி மதிப்பில் மிகப்பெரிய பட்ஜெட் படத்தை எடுப்பதாகவும் அது முழுக்க முழுக்க ஜாக்குலினை மையப்படுத்தி ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டாக இருக்கும் என்றும் சுகேஷ், வாக்குறுதி அளித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததை போல பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இவர் பல கோடி ரூபாய் வரை முறைகேடாக பணம் சம்பாதித்ததாக மத்திய அமலாக்கத் துறை பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் டெல்லி அமலாக்கத் துறை உயரதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் வீடு, சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பங்களா உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 20 சொகுசு கார்கள், லேப்டாப் மற்றும் ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தபடியே பல ஒப்பந்தங்களை முடித்து தருவதாக மருந்து நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷிவந்தர் சிங்கின் மனைவியை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டார் அவரிடம் இருந்து 200 கோடி பணத்தை பெற்று மீண்டும் கைதாகியுள்ளார் சுகேஷ்.

லீனா மரிய பால்
இந்த மோசடி தொடர்பாக சுகேஷின் மனைவியும் நடிகையுமான லீனா மரிய பாலை கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவர் மூலம் சுகேஷ் பல மோசடிகளை அரங்கேற்றியதும் தெரிகிறது. இந்த நிலையில் பணம் மோசடி வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் 7 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

சுகேஷும் ஜாக்குலினும்
சுகேஷும் ஜாக்குலினும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாக்குலினுக்கு சுகேஷ் முத்தம் கொடுக்கும் புகைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாதங்களில் எடுத்திருக்கலாம் என தெரிகிறது. ஏனெனில் அந்த காலகட்டத்தில்தான் இரட்டை இலை வழக்கில் சுகேஷ் ஜாமீனில் இருந்தார்.

4 முறை
ஜாக்குலினை சுகேஷ் 4 முறை சென்னையில் சந்தித்திருப்பதாகவும் அவரை சந்திப்பதற்காக மும்பையில் இருந்து தனிவிமானத்தில் ஜாக்குலின் வர சுகேஷ் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. சுகேஷ் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ( கைதானது) ஜாக்குலினுடன் ரெகுலராக தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

பரிசு பொருட்கள்
சிறையில் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு ரூ 10 கோடி வரை பரிசுப் பொருட்களை சுகேஷ் வாங்கி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகிறது. இவையெல்லாம் பெரும்பாலானோருக்கு தெரிந்தே நடந்துள்ளது. ஆனால் ஜாக்குலினை இன்னொரு விஷயத்தை கூறி தந்திரமாக சுகேஷ் ஏமாற்றியது தெரியவருகிறது.

படங்களில் ஒப்பந்தம் ஆகாத ஜாக்குலின்
அதாவது ஜாக்குலின் அதிக படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்பதை தெரிந்து அவரை தன் வலையில் விழ வைக்க சுகேஷ், "ரூ 500 கோடியில் இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு இந்தியாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோ பிராஜக்ட் படத்தை தயாரிப்பதாகவும் அதில் ஜாக்குலினுக்கு முக்கிய கதாபாத்திரம் தருவதாகவும் அவருடன் ஹாலிவுட் நடிகர்கள் நடிப்பார்கள் என்றும் ஜாக்குலினிடம் தெரிவித்த சுகேஷ், நீங்கள் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியை போல் இருப்பதாகவும் ஒரு பிட்டை போட்டுள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications