முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு
முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மும்பை: ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது குடும்பத்தினருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவைச் சேர்ந்த பிகாஷ் சாஹா என்பவர் திரிபுரா மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் எதன் அடிப்படையில் முகேஷ் அம்பானி, அவரின் மனைவி, குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த வழக்கில் உத்தரவிட்ட திரிபுரா உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 31 மற்றும் ஜூன் 21 இல் பிறப்பித்த உத்தரவில், அம்பானி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது.

மத்திய அரசு
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை கிருஷ்ணா முராரி, அசானுதீன் அமனுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. மத்திய அரசு தரப்பு தன் வாதத்தில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதற்காகவே பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

பாதுகாப்பு
அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கான செலவை அவரே ஏற்றுக் கொள்கிறார். அப்போது நீதிபதிகள் முகேஷ் அம்பானி, அவரின் மனைவி குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால், அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை குறிப்பிட்ட இடத்தோடு, பகுதியோடு சுருக்கி விடக்கூடாது. இசட் பிளஸ் பாதுகாப்பு அம்பானி குடும்பத்தினருக்கு இந்தியா முழுவதும் வழங்கிட வேண்டும். முகேஷ் அம்பானி குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இசட் பிளஸ் பாதுகாப்பு
இசட் பிளஸ் பாதுகாப்புக்கு ஆகும் செலவை முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரிடமே வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல் வெளிநாட்டிலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அம்பானி தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜராகி முகேஷ் அம்பானிக்கும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் தொடர் அச்சுறுத்தல் இருப்பதாக மும்பை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிகவும் பிரபலமானவர்கள், விஐபிகள், உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் பிரமுகர்களுக்கு உளவுத் துறை கொடுக்கும் தகவலின்படி மத்திய அரசு பாதுகாப்பை வழங்கி வருகிறது.

விஐபிக்கள்
விஐபிக்கள், விவிஐபிக்கள், விளையாட்டுத் துறை, பொழுதுபோக்குத் துறை, அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications