மகாராஷ்டிரா: தேசியவாத காங்கிரஸ் பாபா சித்திக் படுகொலை- முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் குடிமைச் சமூகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடம் இல்லை; இவை கடும் கண்டனத்துக்குரியவை என தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக். அண்மையில் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் இணைந்தார் பாபா சித்திக்.

மும்பையில் நேற்று இரவு பாபா சித்திக் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாபா சித்திக்கை 3 பேர் கொண்ட கும்பல் சுட்டுப் படுகொலை செய்தது. இந்த கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைத்உ செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பாபா சித்திக் படுகொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலைக்கு மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
பாபா சித்திக் படுகொலையைத் தொடர்ந்து அவரது நெருங்கிய நண்பரான நடிகர் சல்மான்கான் உள்ளிட்டோர் வீடுகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Deeply shocked and saddened by the brutal murder of #BabaSiddique. Such acts of violence have no place in civil society and deserve the strongest condemnation.
— M.K.Stalin (@mkstalin) October 13, 2024
My heartfelt condolences to his family and party colleagues.
தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பாபா…
இதனிடையே பாபா சித்திக் படுகொலைக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பாபா சித்திக் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். குடிமைச் சமூகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை. இவை கடும் கண்டனத்துக்குரியவை ஆகும். பாபா சித்திக் அவர்களின் குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications