மகாராஷ்டிரா: திடீர் திருப்பங்களை அசால்ட்டாக கையாண்டு முதல் முறையாக முதல்வராகும் உத்தவ் தாக்கரே
Recommended Video
மகாராஷ்டிரா: திடீர் திருப்பங்களை அசால்ட்டாக கையாண்டு முதல் முறையாக முதல்வராகும் உத்தவ் தாக்கரே
மும்பை: மகாராஷ்டிராவில் அஜித்பவாரை நம்பி கடந்த 23-ஆம் தேதி ஆட்சி பொறுப்பேற்ற 4 நாட்களில் பாஜக அரசு நேற்று கவிழ்ந்தது. குடியரசுத் தலைவர் ஆட்சி, பாஜக ஆட்சி என பல்வேறு திருப்பங்களை கொண்ட மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் நடந்த தகிடுதத்தங்கள் இன்று உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பதோடு முற்று பெறுகிறது.
மகாராஷ்டிராவில் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலின் முடிவுகள் 24-ஆம் தேதி வெளியானது. இதில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும், என்சிபி 54 இடங்களிலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இத்தனை நாட்களாக மகாராஷ்டிராவில் நடந்து வந்த அரசியல் நெருக்கடிக்கு இன்று உத்தவ் தாக்கரே பதவியேற்பு மூலம் முடிவு எட்டுகிறது. இது கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்.

மகாராஷ்டிரா
அக்டோபர் 21- மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல்
அக். 24- மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பாஜக- சிவசேனா கூட்டணி பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை பெற்றது. பெரும்பான்மைக்கு 146 இடங்கள் தேவை. ஆனால் இந்த கூட்டணி 161 இடங்களை பெற்றன.
அக். 26- முதல்வர் பதவியில் முதல் இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவுக்கு கொடுத்தால் மட்டுமே ஆதரவு என சிவசேனா திடீரென போர்க்கொடி உயர்த்தியது.
அக். 27: சிவசேனாவுடன் அதிகாரத்தை சமமாக பிரித்து கொள்வோம் என கூறியிருந்தோம். ஆனால் அது முதல்வர் பதவியில் அல்ல என தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்தார்.

பட்னவீஸ் விமர்சனம்
நவ.8- பிரதமருக்கு எதிராக உத்தவ் தாக்கரே ஏற்கமுடியாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக உத்தவ் தாக்கரே குறித்து பட்னவீஸ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
நவ.9- பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைத்தார். மேலும் ஆட்சி அமைக்க 72 மணிநேரம் அவகாசம் கொடுத்தார்.
நவ.10- பாஜக ஆட்சி அமைக்க முடியாது என கூறியதை அடுத்து திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு ஆட்சி அமைக்க உரிமை கோருமாறு சிவசேனாவுக்கு ஆளுநர் அழைத்தார்.
நவ.11- 30 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறினார் சேனா எம்பி அரவிந்த் சாவந்த்

விலகிய சிவசேனா
நவ.12- மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்
நவ.17- என்டிஏவிலிருந்து மொத்தமாக சிவசேனா கட்சி வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது
நவ.19- மோடியை காப்பாற்றியதே பால்தாக்கரேதான். அதை மறக்க வேண்டாம் என சிவசேனா விமர்சனம்
நவ. 20- விவசாயிகள் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் சரத்பவார் சந்திப்பு

சிவசேனா எதிர்ப்பு
நவ.21- சுழற்சி முறையில் முதல்வர் பதவிக்கு தயார் இல்லை என சிவசேனா கருத்து
நவ-22- சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் மகாராஷ்டிரத்தில் விரைவில் புதிய ஆட்சி அமையும் என என்சிபி தலைவர் சரத்பவார் கருத்து
நவ.23- பாஜக- என்சிபியின் அஜித் பவார் தலைமையிலான எம்எல்ஏக்கள் இணைந்து மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைத்தனர். அதில் முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னவீஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர்.
நவ. 24- மகாராஷ்டிராவில் புதிய அரசுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ்- சிவசேனா உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது. அஜித் பவார் கொடுத்த ஆதரவு கடிதத்தை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு
நவ.25- உச்சநீதிமன்றத்தில் ஆதரவு கடிதத்தை சமர்ப்பித்த அஜித் பவார்.
துணை முதல்வர் அஜித் பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டது. சிவசேனா,காங், என்சிபி அரசுக்கு 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு- உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
நவ. 26- நவம்பர் 27-ஆம் தேதி பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
நவ. 26 பிற்பகல் 2.30 மணிக்கு- துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார்
நவ.26 மாலை 3.30 மணிக்கு- முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னவீஸ்
இரவு 9 மணிக்கு- ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் உத்தவ் தாக்கரே
நவ.27- மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தார் உத்தவ் தாக்கரே.
மகாராஷ்டிராவில் முதல் சட்டசபை கூட்டம் தொடங்கியது. அப்போது 288 எம்எல்ஏக்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு வந்த அஜித் பவாரை கட்டி அணைத்து வரவேற்றார் சுப்ரியா சுலே. தேவேந்திர பட்னவீஸை கைகுலுக்கி வரவேற்றார் சுலே.
நவ.28- தாதரில் உள்ள சிவாஜி அரங்கில் மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். இவர் சிவசேனா கட்சியின் முதல் முதல்வராவார்.












Click it and Unblock the Notifications