சிவசேனா: சபாநாயகர் தீர்ப்பு பச்சை ஜனநாயகப் படுகொலை.. உச்சநீதிமன்றம் போவதாக உத்தவ் தாக்கரே ஆவேசம்!
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா என மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் ராகுல் நார்வேகர் அளித்த தீர்ப்புக்கு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்லப் போவதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டு முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து பாஜகவுடன் இணைந்து உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்தனர். பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.

அப்போது ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்ற 40 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உத்தவ் தாக்கரே தரப்பு, சபாநாயகர் ராகுல் நார்வேகரிடம் மனு கொடுத்தது. அதேபோல ஏக்நாத் ஷிண்டே தரப்பு, உத்தவ் தாக்கரேவின் 14 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு தந்தது. இந்த மனுக்கள் மீது சபாநாயகர் முடிவு எதுவும் எடுக்காததால் உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு முறையிட்டது. உச்சநீதிமன்றம் இதில் கடுமை காட்டிய நிலையில் சபாநாயகர் ராகுல் நார்வேகர் அதிரடி தீர்ப்பு வழங்கினர்.
ராகுல் நார்வேகர் தமது தீர்ப்பில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலானதுதான் உண்மையான சிவசேனா. ஏக்நாத் ஷிண்டேவை சட்டசபை குழு தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் கிடையாது. உத்தவ் தாக்கரே தரப்பு கொடுத்த 40 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கும் செய்யும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே தரப்பு கொடுத்ததன் அடிப்படையில் 14 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய தேவை இல்லை என அதிரடியாக தெரிவித்திருந்தார். ஏற்கனவே தேர்தல் ஆணையமும் ஏக்நாத் ஷிண்டே தரப்புதான் உண்மையான சிவசேனா என தெரிவித்திருந்த நிலையில் அதனை சபாநாயகர் ராகுல் நார்வேகரும் உறுதி செய்திருந்தார்.
இத்தீர்ப்பு உத்தவ் தாக்கரேவுக்கு கடும் பின்னடைவாகும். இது தொடர்பாக கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, சபாநாயகரின் தீர்ப்பு பச்சை ஜனநாயகப் படுகொலை. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications