உக்ரைனிலிருந்து 70% சூர்யகாந்தி எண்ணையை இறக்குமதி செய்யும் இந்தியா.. பற்றாக்குறைக்கு சான்ஸ்?
மும்பை: உக்ரைனில் போர் நடந்து வருவதால், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெய் வரத்து குறைந்தாலும், நிலையை சமாளிக்க முடியும் என அதானி வில்மர் நிறுவனத்தின் சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. ரஷ்யா மேலும் முன்னேறாமல் இருக்க பாலங்கள், சாலைகளை உக்ரைன் உடைத்துவருகிறது.
இந்நிலையில், போர் சூழல் காரணமாக 4 லட்சத்துக்கும் அதிகமான உக்ரேனியர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். விமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. கடல் மார்க்கமாக ரஷ்யா தாக்க வாய்ப்பிருப்பதால், கடல்வழி போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய்
இந்தியா உக்ரைனில் இருந்து 70% சூரியகாந்தி எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. உக்ரைனில் தற்போது போர் சூழல் ஏற்பட்டிருப்பதால், தற்போது எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத சூழல் உருவாகி இருக்கிறது என அதானி வில்மர் நிறுவனத்தின் சி.இ.ஓ அங்ஷூ மல்லிக் எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், '' இந்தியாவிடம் தற்போது 45 நாட்களுக்கான தேவையான எண்ணெய் கையிருப்பில் உள்ளது. ஓராண்டில் இந்தியா 23 மெட்ரிக் டன் எண்ணைய் கொள்முதல் செய்கிறது. அதில் 3 டன் மட்டும் தான் சூரியகாந்தி எண்ணெய் கொள்முதல் செய்யப்படுகிறது. மொத்த எண்ணெய் கொள்முதலில் இது 12-13 சதவிகிதம் மட்டுமே.

போர் சூழல்
பொதுவாக போர் சூழலில், இறக்குமதி தடைபடும் போது, சூரியகாந்தி எண்ணெயில் இருந்து, 50% பேர் பாமாயில் அல்லது சோயாபீனை வாங்கும் முனைப்பில் இருப்பார்கள். சூரியகாந்தி எண்ணெய் கொள்முதல் செய்பவர்கள் நாட்டிலேயே 5 சதவிகிதத்தினரே. உக்ரைனில் நிலைமை சரியாகும் வரை இந்தியா சமாளிக்கும் அளவுக்கு எண்ணெய் கையிருப்பில் உள்ளது. இந்த நிலை சீராக இன்னும் 30-60 நாட்கள் வரை ஆகலாம். இதைப்பார்த்து பயப்படவில்லை. உலக அளவில் ஒரு எண்ணெயின் விலை திடீரென உயரும் போது, மற்ற எண்ணெய்களின் விலையும் அதிகரிக்கும். அதேநேரம் பாமாயில் மற்றும் சோயாபீன் விலை தற்போது சமநிலையில் இருக்கிறது.

இறக்குமதி
45 நாட்களுக்கு மேல் உக்ரைனில் நிலைமை சரியாகாமல் இருந்து, நமக்கு எண்ணெய் இறக்குமதி செய்யப்படாமல் இருந்தால், வேறு சில விஷயங்களையும் முயற்சி செய்து பார்க்க வேண்டும். இப்போதே இந்திய இறக்குமதியாளர்கள் அர்ஜென்டினா நாட்டு விநியோகிப்பாளர்களை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். விரைவில் அர்ஜெண்டினாவில் இருந்தும் எண்ணெய் இறக்குமதி செய்யப்படும். ஏப்ரல் இறுதிக்குள் இரண்டு அல்லது மூன்று பார்சல்கள் அர்ஜெண்டினாவிடம் இருந்து வரும்.

சோயா எண்ணெய்
இதுபோன்ற இக்கட்டான சூழல் வரும்போது, மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் பொருளுக்கு மாறிவிடுவார்கள். மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலத்தில் சோயா எண்ணெய்க்கு மாறிவிட்டார்கள். 50 சதவிகிதம்பேர் இதுபோல மற்ற எண்ணெய்க்கு மாறிவிடுவார்கள், மீதமுள்ள 50 சதவிகிதத்தை எப்படியாவது சமாளிக்க வேண்டும். இது மிகப்பெரிய பிரச்சனையாகும். அதேபோல விலை ஏறும், நிலைமை சரியானதும், விலை குறையும்.

அர்ஜென்டினா
அதேபோல் 1.5 லட்சம் டன் எண்ணைய் பிப்ரவரி முதல் வாரத்தில் உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் இந்தியா வந்தடையும். அதேபோல அர்ஜென்டினாவில் இருந்தும் நமக்கு எண்ணெய்கள் வந்து சேரும். பழைய நிலை திரும்பும் வரை இதை வைத்து சமாளிக்க முடியும். அதேபோல ஒரு டன் அளவில் கடுகு எண்ணெயும் வரவிருக்கிறது. அதனால் முடிந்தவரை சமாளிக்க முடியும். பயப்பட தேவையில்லை.

தென்னிந்தியா
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ரைஸ்ப்ரான் ஆயில் மற்றும் ரீபைணுடு ஆயில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் சமையலுக்கு அவர்கள் கடலெண்ணெயை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ரைஸ்ப்ரான் ஆயில் உடலுக்கு நல்லது என நிறுவனகள் அதை விற்பனையில் அதிகப்படுத்தி வருகின்றன. அதோடு சூரியகாந்தி எண்ணெயை விட இது விலை குறைவு. அதனால் பலர் ரைஸ்ப்ரான் ஆயிலுக்கு மாற வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications