மகாராஷ்டிராவில் வேற முகம் காட்டிய சிவசேனா..வெலவெலத்த அதிருப்தி கோஷ்டிக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சிவசேனா தொடர்ந்து மிரட்டி வருவதால் 15 பேருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது மத்திய பாஜக அரசு.
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கி உள்ளனர். பாஜக ஆதரவுடன் கலகக் குரல் எழுப்பியுள்ள இந்த எம்.எல்.ஏக்கள் தற்போது அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் சொகுசு ஹோட்டலில் தங்கி உள்ளனர்.

கடந்த ஒருவார காலமாக அன்பாக, அமைதியாக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சிவசேனா தலைமை வேண்டுகோள் விடுத்தது. ஆனாலும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இறங்கி வரவில்லை. அடுத்தடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கைதான் அதிகரித்தது. சிவசேனா தலைமை பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் தரவில்லை.
இந்நிலையில் சிவசேனா தொண்டர்கள் இப்போது வீதியில் இறங்கிவிட்டனர். அதிருப்தி எம்.எல்.ஏக்களின் அலுவலகங்கள் தாக்கப்பட்டு வருகின்றன அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இனி மகாராஷ்டிரா மாநிலத்துக்குள் நுழையவோ நடமாடவோ முடியாத ஒருவித பதற்ற சூழ்நிலையை சிவசேனா உருவாக்கி கொண்டிருக்கிறது. அதற்கேற்ப, நீங்களும் எத்தனை நாள்தான் குவஹாத்தியில் பதுங்கி கிடப்பீங்க பார்ப்போம் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மிரட்டல் விடுத்துள்ளார். அதேபோல் சிவசேனா தொண்டர்களும், துரோகிகளே! உங்களை மன்னிக்க மாட்டோம்; பால்தாக்கரே குடும்பத்துக்கு துரோகம் செய்த உங்களுக்கு மன்னிப்பும் கிடையாது என கூறி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் குவஹாத்தியில் மேலும் சில நாட்களுக்கு தங்குவது என அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர். இதனிடையே சிவசேனாவின் மிரட்டலுக்குள்ளாகி இருக்கும் 15 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு மத்திய பாஜக அரசு ஒய்பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது. மகாராஷ்டிராவில் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கும் எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கும் பாதுகாப்பை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளதாம் மத்திய அரசு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications