உத்தவ் தாக்கரே பேசியது மட்டும் தப்பில்லையா?.. பெயிலில் வந்த அமைச்சர் நாராயண் ரானே விமர்சனம்!
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக நான் பேசியதில் எந்த தவறும் இல்லை, சிவசேனா கட்சியினர் இதைவிட மோசமாக பலரை பற்றி பேசி உள்ளனர் என்று பெயிலில் விடுதலையான மத்திய அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே கூறிய நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் மீது மகாராஷ்டிராவில் பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இவர் நேற்று இரவு மஹாத் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதையடுத்து மஹாத் நீதிமன்ற இவருக்கு பெயில் வழங்கி உத்தரவிட்டது.

பெயிலில் வந்த நாராயண் ரானே தனது கைது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில், என்னுடைய நல்ல குணத்தை சிலர் தவறாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதை பற்றி எல்லாம் நான் இப்போது பேச விரும்பவில்லை. என்னுடைய யாத்திரை தொடரும்.
பிரதமர் மோடியின் உத்தரவின் பெயரில் நான் என்னுடைய யாத்திரையை தொடங்கினேன். அதை இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் தொடர்வேன். பிரதமர் மோடியின் 7 ஆண்டு ஆட்சி குறித்து மக்களிடம் பேசவே என்னுடைய யாத்திரையை மேற்கொண்டு உள்ளேன். மக்களிடம் பிரதமர் மோடி ஆட்சியின் நன்மைகள் குறித்து பேசுவேன்.
நான் என்ன தவறாக சொல்லிவிட்டேன். ஒரு முதல்வருக்கு நாட்டை குறித்த அடிப்படை அறிவு இல்லாததை விமர்சித்தேன். இது தவறா? இதற்கு முன் சிவசேனா தலைவர்கள் பலர் வரைமுறையை மீறி பேசி இருக்கிறார்கள். ஏன் உத்தவ் தாக்கரே கூட தவறாக பேசி இருக்கிறார் என்று ரானே தனது பேச்சில் குறிப்பிட்டார். உ.பி முதல்வர் ஆதித்யானத்தை செருப்பால் அடிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே முன்பு கூறியதை குறிப்பிட்டு ரானே இப்படி விமர்சனம் செய்தார்.

கடந்த சில நாட்களாக நாராயண் ரானே 'ஜன் ஆசீர்வாத யாத்திரை' என்ற பெயரில் பேரணி நடத்தி வந்தார்.இந்த யாத்திரையில் பேசிய நாராயண் ரானே, இந்தியா சுதந்திரம் அடைந்த தினம் கூட உத்தவ் தாக்கரேவிற்கு தெரியவில்லை. நான் அவர் அருகில் இருந்திருந்தால் அவரின் கன்னத்திலேயே அறைந்திருப்பேன் என்று நாராயண் ரானே குறிப்பிட்டு இருந்தார்.
இவரின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் நேற்று இவர் மகாராஷ்டிரா மாநில போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு பின் பெயிலில் விடுவிக்கப்பட்டார்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications