இடஒதுக்கீடுக்கு எதிராக பேசிய ராஜ்தாக்கரே.. கொந்தளித்த ராம்தாஸ் அத்வாலே.. என்ன சொன்னார் பாருங்க
மும்பை: மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவுக்கு எதிராக பேசியதற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜ் தாக்கரே தனது கருத்தை வாபஸ் பெறாவிட்டால், தலித், பழங்குடியின மக்கள் அவரை புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவில் முன்னணி அரசியல் கட்சியாக நவநிர்மாண் சேனா உள்ளது. இதன் தலைவராக ராஜ் தாக்கரே உள்ளார். ஆக்ரோஷமான கருத்துகளை பேசுபவராக அறியப்படும் ராஜ்தாக்கரே, பண்டர்பூரில் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதில் சாதி ஒரு காரணியாக இருக்க கூடாது.. தனியார் வேலைவாய்ப்புகளை கொடுத்து கொண்டு இருக்கும் போது, அரசு வேலையில் இடஒதுக்கீடு அடிப்படையில் எத்தனை பேர் பயன்பெற்றனர் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். ஓட்டுக்காக தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்பதை அனைத்து சமூக மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.
ராஜ் தாக்கரேவின் இந்த கருத்துக்கு இந்திய குடியரசுகட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அத்வாலே கூறுகையில், "இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தை ராஜ்தாக்கரே திரும்ப பெற வேண்டும். ராஜ் தாக்கரே இதை செய்யாவிட்டால், வரும் சட்டமன்ற தேர்தலில் தலித், பழங்குடியின மற்றும் ஒபிசி பிரிவு மக்கள் ராஜ் தாக்கரே கட்சி வேட்பாளர்களை புறக்கணிக்க வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்பான அவரின் கருத்து தேவையற்றது" என்றார்.
ராம்தாஸ் அத்வாலே கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. மகாராஷ்டிராவில் உள்ள பல்வேறு பகுதிகளில் தலித் வாக்குகள் பாஜக கூட்டணிக்கு கிடைப்பதற்கு முக்கிய பங்காக ராம்தஸ் அத்வாலே இருக்கிறார். மத்திய இணை அமைச்சராக தற்போது ராம்தாஸ் அத்வாலே பதவி வகித்து வருகிறார். நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாரஷ்டிராவில் தற்போது பாஜக கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே ஆட்சி நடத்தி வருகிறார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications