மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவின் கடைசி கிராமம்.. டீக்கடையை பார்த்து ‛‛ஜெய்ஹோ’’ சொன்ன ஆனந்த் மஹிந்திரா.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

மும்பை: இந்தியாவின் கடைசி கிராமமான உத்தரகாண்ட் மாநிலம் மானாவில் உள்ள டீக்கடை பார்த்த ‛‛ஜெய்ஹோ'' என பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். இதன் பின்னணியில் முக்கிய விஷயம் ஒன்று உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடல் மட்டத்தில் இருந்து 10,500 அடி உயரத்தில் அமைந்துள்ள கிராமம் தான் மானா. இந்தோ-திபெத் எல்லையில் அமைந்திருக்கும் இந்த கிராமம் தான் இந்தியாவின் கடைசி கிராமமாகும்.

இந்த கிராமம் பத்ரிநாத் பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. குளிர் நிறைந்த பகுதியாக இந்த 12:05 PM 11/6/2022கிராமம் அமைந்துள்ளது.

படிச்சேன்! வேலை கிடைக்கல! டீக்கடை ராணியா மாறிட்டேன்! அசத்திய பட்டதாரி பெண். படிச்சேன்! வேலை கிடைக்கல! டீக்கடை ராணியா மாறிட்டேன்! அசத்திய பட்டதாரி பெண்.

மோடி தங்கிய கடைசி கிராமம்

மோடி தங்கிய கடைசி கிராமம்

இது இந்தியாவின் எல்லை பகுதியாக உள்ளதால் இங்கு இந்தோ-திபெத் பாதுகாப்பு படை வீரர்கள், இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஏராளமானவர்கள் இந்த கிராமத்துக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்தியாவின் எல்லையில் கடைசி கிராமமாக அமைந்துள்ள இங்கு கடந்த மாதம் பிரதமர் மோடி சென்றார். புதிய சாலை திட்டங்களை துவக்கி வைத்தார். அதோடு இரவில் அந்த பனிபிரதேசத்தில் தகரத்தால் அமைக்கப்பட்ட கூடாரத்தில் தங்கிய பிரதமர் மோடி இரவில் கிச்சடி சாப்பிட்டார்.

 இணையத்தில் பரவும் டீக்கடை படம்

இணையத்தில் பரவும் டீக்கடை படம்

இந்நிலையில் தான் இணையதளத்தில் ஒரு படம் வேகமாக பரவியது. இந்தியாவின் கடைசி கிராமமாக உள்ள மானாவில் உள்ள டீக்கடையின் படம் தான் அது. இந்த டீக்கடையில் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் போர்டு இருந்தது. இதனை அருள்மொழி வர்மன் 2.0 என்ற பெயர் கொண்ட ட்விட்டர் பயனாளர் தனது பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

ஆனந்த் மஹிந்திரா ட்விட்

ஆனந்த் மஹிந்திரா ட்விட்

இதை பார்த்த ஆனந்த் மஹிந்திரா, ‛‛ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமமானது. இந்த படம் இந்தியாவின் டிஜிட்டல் பணபரிவர்த்தனை கட்டமைப்பின் வளர்ச்சியையும், தேவையின் அளவையும் காட்டுகிறது. ஜெய் ஹோ'' என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்களில் முக்கியமான ஆனந்த் மஹிந்திரா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வான நபராக உள்ளார். இந்தியாவில் குக்கிராமங்களில் வசிக்கும் திறமைசாலிகளை கண்டறிந்து அடிக்கடி பாராட்டுவதையும், இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் சாதனை தொடர்பான பதிவுகளை பொதுமக்களுக்கு அடையாளம் காட்டி வருகிறார். அந்த வகையில் தான் தற்போது டிஜிட்டல் பணபரிவர்த்தனை தொடர்பாக அவர் பெருமைப்பட கூறியுள்ளார்.

உலக நாடுகளில் இந்தியா முன்னணி

உலக நாடுகளில் இந்தியா முன்னணி

இந்தியாவில் 2016ம் ஆண்டில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை நடைமுறை அமலுக்கு வந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதிக ஆர்வம் காட்டியது. இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை வெற்றி பெறாது என எதிர்க்கட்சியினர் கூறிய நிலையில் தற்போது அது பொய்யாகி உள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. சிறிய பெட்டிக்டை முதல் பெரிய வணிக நிறுவனம் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறை செயல்பட்டால் உள்ளது.

 முன்னணி நாடாக இந்தியா

முன்னணி நாடாக இந்தியா

இதனால் டிஜிட்டல் முறையிலான யுபிஐ பணபரிமாற்றத்தில் உலகில் முன்னணி நாடாக இந்தியா உள்ளது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் 7.7 சதவீதம் உயர்ந்து 730 கோடியாக அதிகரித்தது. இதன்மூலம் மொத்தம் ரூ.12.1 லட்சம் கோடிக்கு பணபரிவர்த்தனை நடந்தது. இது கடந்த செப்டம்பரில் ரூ.11.16 லட்சம் கோடியாக தான் இருந்தது. மாதம்மாதம் இந்த டிஜிட்டல் பணபரிவர்த்தனை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Famous industrialist Anand Mahindra said that he saw a tea shop in Mana, Uttarakhand, India's last village, Jaiho''. There is an important point behind this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X