'புலி'க்கு வழிவிடுங்க. . வாகனங்களை நிறுத்திய போலீசார். . மகாராஷ்டிராவில் ருசிகர சம்பவம்!
மும்பை: மகாராஷ்டிராவில் 'புலி' ஒன்று சாலையை கடப்பதற்கு போக்குவரத்து போலீசார் உதவிய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உலக பணக்காரர்கள் முதல் சாதாரண மக்கள் வரை என அனைவரது கைகளிலும் இப்போது ஆண்ட்ராய்டு மொபைல்கள் அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது.
குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரை என அனைவரது கைகளிலும் எப்போது இருக்கும் ஒரு பொருளாக செல்போன் மாறிவிட்டது. அந்த அளவுக்கு ஆண்ட்ராய்டு மொபைலில் ஏராளமான தகவல்களை நாம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும்.

உடனுக்குடன். .
குறிப்பாக வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் பரவசமூட்டும் சம்பவங்கள் என்றால் உடனுக்குடன் பகிரப்பட்டு அந்த சம்பவம் உடனடியாக பேசுபொருளாக மாறிவிடுகிறது. நூதன சம்பவங்கள், வீர சாகசங்கள், என பார்ப்பவர்களை பரவசப்படுத்தும், பூரிப்படையவைக்கும் சம்பவங்கள் உலகில் எங்கு, எந்த இடத்தில் நடைபெற்றாலும் அது உடனுக்குடன் நமது கைகளுக்கு வந்து விடுகிறது. அந்த அளவுக்கு சமூக வலைத்தளங்கள் இதில் முக்கிய இடம் பதிக்கின்றன.
|
டிரெண்ட் ஆன வீடியோ
அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. பொதுவாக நாம் சாலையை கடப்பதற்கு கண் தெரியாத நபர்களுக்கு உதவுவது உண்டு. சிலர் குழந்தைகளுக்கு சாலையை கடக்க உதவுவர். ஆனால் மராட்டியத்தில் உள்ள ஒரு போக்குவரத்து போலீசார், காட்டில் கம்பீர நடைபோடும் 'புலி' க்கு சாலையை கடக்க உதவியுள்ளார். இதனால் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அந்த போலீசார் இருபுறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்திவிட்டு புலி சாலையை கடக்க உதவியுள்ளார். போலீசாரின் இந்த சூப்பர் செயலை தங்களது வாகனத்தில் இருந்தபடியே ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சாலையை கடந்து சென்ற புலி
இந்த வீடியோ தான் தற்போடு பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், 'முதலில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போலீஸ்காரர்கள் இருவர் அந்த இடத்தில் வாகனங்களை சிறிது நேரம் காத்து நிற்குமாறு கூறுகின்றனர். இருபுறமும் வாகனங்கள் நின்றிருந்த நிலையில் சாலையோரத்தில் இருந்து கம்பீர நடைபோட்ட படி புலி வருகிறது. அந்த புலி சாலையை கடந்து மறுபுறத்தில் உள்ள காட்டுப்பகுதிக்குள் செல்கிறது'. இதில் போக்குவரத்து போலீசார் முன்னதாகவே அந்த புலியை பார்த்ததோடு அது அந்த சாலையை கடக்கத்தான் முயன்று வருகிறது என்பதை உணர்ந்தனர்.

புலிக்கு கிரீன் சிக்னல்
இதையடுத்து தான், அந்த புலியை சாலையை கடக்க வைக்க வேண்டும் என்று நினைத்து, இருபுறமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த வாகன போக்குவரத்து நிறுத்தியுள்ளனர். புலிக்கு தான் கிரீன் சிக்னல் என்றும், வாகன ஓட்டிகளுக்கு ரெட் சிக்னல் என்றபடி புலி சாலையை கடக்க உதவிய போலீஸ்காரர்களுக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதேபோல் அந்த சாலையை கடந்து செல்லும் புலியை அங்கிருந்த வாகன ஓட்டிகள் பலர் வீடியோ எடுத்துள்ளனர். பலரால் பகிரப்பட்டும் வரும் இந்த வீடியோவை ஐஎப் எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications