அம்பானி மனைவி நீடா அணிந்திருந்த ஆரம் 178 ரூபாய் மட்டுமே!
மும்பை: தனது கடைசி மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் நீடா அம்பானி அணிந்திருந்த ஆரத்தின் விலை வெறும் ரூ 178 மட்டுமே என தகவல்கள் கிடைத்துள்ளன. இதை கேட்டவர்கள் எல்லாம் என்னாது வெறும் 178 ரூபாய் தானா என கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளார்கள்.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் மருந்து நிறுவன அதிபர் வீரேன் மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் கடந்த 12 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தை அடுத்து வரவேற்பு நிகழ்ச்சியும் ஆசி வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் அதாவது ப்ரீ வெட்டிங்கிற்கு மட்டும் முகேஷ் அம்பானி ரூ 1260 கோடியை செலவழித்துள்ளார். திருமணத்திற்கு உலகமே வியக்கும் வகையில் செய்து திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.
இதற்காக இந்தூரில் இருந்து 25 சமையல் கலைஞர்களை வரவழைத்து 2500 க்கும் மேற்பட்ட உணவு பொருட்களை விருந்தினர்களுக்கு திருமண உணவாக பரிமாறப்பட்டது. இதற்கு மட்டுமே ரூ 200 கோடி செலவானது. பொதுவாகவே நீடா அம்பானியின் விலை உயர்ந்த ஆடைகள், அவர் அணிந்திருக்கும் விசேஷ அணிகலன்கள் பெரிதும் பேசப்படும்.
அந்த வகையில் நீடா அம்பானி திருமணத்தின் முந்தைய கொண்டாட்டத்தின் போது அவர் அணிந்திருந்த ஆரம் பெரிய மரகத பச்சை கல் பதிக்கப்பட்ட நெக்லஸ் விருந்தினர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த ஆரத்தின் விலை சுமார் ரூ 600 கோடி என்கிறார்கள். அது போல் நீடா அம்பானி ஒரு வைர மோதிரத்தையும் அணிந்திருந்தார்.
இந்த மோதிரம் முகலாயர் காலத்தைச் சேர்ந்தது. இதன் விலையும் ரூ 55 கோடி இருக்கும். நீடா அம்பானி அணிந்திருந்த ஆரம் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களை மட்டும் கவராமல் அதை பார்த்தவர்களையும் கவர்ந்துள்ளது. இதனால் இந்த நகையின் கவரிங்கை ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கல்யாணி கவரிங் நகை கடை தயாரித்துள்ள நகை விற்பனைக்கு வந்துள்ளது.
அந்த நகையின் விலை ரூ 178 மட்டுமே. நீடா அணிந்திருந்ததை போல் இருந்தது. என்ன வித்தியாசம் என்றால் அவர் அணிந்திருந்தது வைரம், இவர்கள் தயாரித்திருப்பது சாதாரண கல். அதிலும் கலர் கலராக நிறைய உள்ளன. 1980களில் நதியா கம்மல், நதியா வளையல், நதியா கொண்டை என பேமஸ் ஆனதை போல் நீடாவின் ஆரமும் தற்போது பிரபலமடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications