இன்னும் 48 மணி நேரம்.. டெல்லியில் வெடிக்கும் அடுத்த பூகம்பம்? சரத் பவார் ராஜினாமா முடிவல்ல, தொடக்கம்
மும்பை: மூத்த அரசியல்வாதியான சரத் பவார் என்சிபி தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், இது இத்துடன் நிற்காது. அடுத்த அரசியல் பூகம்பத்திற்கு இட்டுச் செல்லும் என்றே கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் கடந்தாண்டு மிகப் பெரிய அரசியல் குழப்பம் நிலவியது. அப்போது சிவசேனா-என்சிபி- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அங்கு நடந்து வந்த நிலையில், ஷிண்டே தலைமையில் சிவசேனாவுக்குள் அதிருப்தியாளர்கள் அணிவகுத்தனர்.
இதன் காரணமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்த ஷிண்டே தலைமையில் சிவசேனா ஆட்சி அமைத்தது. இதன் மூலம் அங்கே ஆட்சியில் இருந்த சிவசேனா-என்சிபி- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது.

அதன் ஷிண்டே தலைமையிலான பாஜக- சிவசேனா கூட்டணி அரசே அங்கு நடந்து வந்தது. இந்தச் சூழலில் அங்கே மீண்டும் ஒரு அரசியல் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் முக்கியமான மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் என்சிபி கட்சியின் தலைவருமான சரத் பவார் இன்று கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது அவரது கட்சிக்குள் மட்டுமின்றி தேசியளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சுப்ரியா சுலே: ஆனால், இந்த விவகாரம் இத்துடன் முடியாது என்றே கூறப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய என்சிபி-இன் சுப்ரியா சுலே அடுத்த 15 நாட்களில் டெல்லியிலும், மகாராஷ்டிராவிலும் இரண்டு அரசியல் பூகம்பங்கள் ஏற்படும் என்று கூறியிருந்தார். அவர் கூறி 13ஆவது நாள், அதாவது இன்று நாம் முதல் அரசியல் பூகம்பத்தைப் பார்த்துவிட்டோம்.
மூத்த அரசியல்வாதியான சரத் பவார், 24 ஆண்டுக்கால தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் கூறியது போல அடுத்த இரண்டு நாட்களில் அடுத்த அரசியல் பூகம்பம் என்னவாக இருக்கும் என்பதே இப்போது பேச்சாக உள்ளது.

சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலே இப்போது தனது தந்தை முன்பு எம்பியாக இருந்த பாராமதியில் இருந்து மக்களவை எம்.பியாக இருக்கிறார். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இவர் செய்தியாளர்களிடம், "அடுத்த 15 நாட்களில் இரண்டு அரசியல் பூகம்பங்கள் ஏற்படும். ஒன்று டெல்லியிலும் மற்றொன்று மகாராஷ்டிராவிலும் ஏற்படும்" என்று கூறியிருந்தார். முன்னதாக வஞ்சித் பகுஜன் அகாடி தலைவரும் அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கரும் இதே கருத்தைக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அஜித் பவார்: சரத் பவாரின் மருமகனும் என்சிபியின் மற்றொரு முக்கிய தலைவருமான அஜித் பவார் பாஜகவுடன் அங்கே நெருங்கி வருகிறது. இரு தரப்பும் இணைந்து கூட்டணி அமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. என்சிபி கட்சியிடம் 53 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில், அதில் 34 பேர், அஜித் பவாருக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. என்சிபியின் 2ஆம் கட்ட தலைவர்களும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஓகே சொல்லியுள்ளதாகவே கூறப்படுகிறது.
மேலும், தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசைக் கவிழ்த்த 16 எம்எல்ஏக்களுக்கு எதிராகத் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் தான் இப்படி கூட்டணி குறித்த தகவல்கள் பரவின. ஷிண்டே தரப்பிற்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் பாஜகவுக்கு அஜித் பவார் மற்றும் அவரது எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும்.

குறியீடு: இந்தச் சூழலில் தான் சுப்ரியா சுலே இப்படியொரு கருத்தைக் கூறியிருந்தார். சமீபத்தில் சரத் பவார் கூட தனது கட்சி கூட்டம் ஒன்றில், "சரியான நேரத்தில் ரொட்டியைத் திருப்ப வேண்டும் என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். இல்லையென்றால் ரொட்டி வீணாகிவிடும்" என்று குறிப்பால் உணர்த்துவது போலப் பேசியிருந்தார். சரத் பவாரின் இந்த பேச்சு, அவரது மருமகன் அஜித் பவாரின் அடுத்த நகர்வுக்கான குறியீடாக இருக்கும் என்று பலரும் கருதினர்.
இந்தச் சூழலில் தான் சரத் பவார் திடீரென தனது ராஜினாமாவை முடிவை அறிவித்துள்ளார். அடுத்த தலைவரைத் தேர்வு செய்ய அங்கே குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து அஜித் பவார் அல்லது சுப்ரியா சுலே இருவரில் யாருக்காவது ஒருவருக்கு தான் இருக்கும்.
அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினர், பிரபுல் படேல் மற்றும் ஹசன் முஷ்ரீப் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் அமலாக்க இயக்குநரகம் மூலம் குறிவைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பாஜக கூட்டணியில் சேரவே ஆர்வமாக உள்ளனர்.
அடுத்து என்ன: இருப்பினும், சரத் பவார் போன்ற மூத்த அரசியல்வாதி இருப்பதால் ஷிண்டே செய்தது போல் என்சிபியை உடைக்கும் துணிச்சல் அஜித் பவாருக்கு இல்லை. மேலும் பல எம்எல்ஏக்கள் சரத் பவாரின் சம்மதம் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்பதில் உறுதியாகவே இருந்தனர். சரத் பவாரின் ஆதரவு இல்லாமல் கூட்டணி அமைத்த போது என்ன நடந்தது என்பது அஜித் பவாருக்கு நினைவில் இருக்கும்.
இந்தச் சூழலில் தான் சரத் பவார் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சுப்ரியா சுலே சொன்னதை வைத்துப் பார்க்கும் போது அடுத்த இரண்டு நாட்களில் டெல்லியில் அடுத்த அரசியல் பூகம்பம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
-
50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்! -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications