"ரூ.3,800 கோடிக்கு சொத்து".. காலமான ரத்தன் டாடா யார் தெரியுமா? கால்பதித்த துறைகளை பாருங்க!
மும்பை: இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக அறியப்படும் ரத்தன் டாடா தனது 86வது வயதில் காலமாகி உள்ளார். மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. இந்திய தொழிற்துறையின் டைட்டனாக அறியப்படும் ரத்தன் டாடா யார்? பின்னணி என்ன? இந்திய தொழில்துறையில் அவர் சாதித்தது என்ன? சொத்து மதிப்பு என்ன? என்பது பற்றிய விபரம் வருமாறு:
இந்தியாவில் பிரபல தொழிலதிபராக வலம் வந்தவர் ரத்தன் டாடா. இவருக்கு வயது 86. டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா மும்பையில் வசித்து வந்தார்.

இந்நிலையில் தான் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை ரத்தன் டாடா மறுத்தார். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் இருப்பதாக அவர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தான் இன்று ரத்தன் டாடாவின் உயிர் மும்பையில் பிரிட்ஸ் கேண்டி மருத்துவமனையில் பிரிந்தது. மருத்துவமனையில் அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
ரத்தன் டாடா 1937 ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் மும்பை மாகாணத்தில் அங்கம் வகித்த சூரத்தில் பிறந்தார். தற்போது சூரத் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இவரது முழுப்பெயர் ரத்தன் நாவல் டாடா. இதனை தான் சுருக்கி ரத்தன் டாடா என்று அடையாளப்படுத்தப்பட்டார்.
இவர் 1962ம் ஆண்டு அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் ஆர்க்கிடெக்சர் மற்றும் ஸ்ட்ரெக்சரல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார். அதன்பிறகு அவர் டாடா குழுமத்தில் இணைந்தார். ஜாம்செட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தில் அவர் தனது பணியை தொடங்கினார்.
தொடக்கத்திலேயே அவர் உயர் பதவிக்கு செல்லாமல் சாதாரணமாக பணியாளர்களுடன் பணி செய்தார். ஸ்டீல் தொழில்துறையில் உள்ள நுட்பங்களை அவர் கற்று கொண்டார். அதன்பிறகு ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் அட்வான்ஸ்ட் மேனேஜ்மென்ட் புரோகிராமை 1975 ம் ஆண்டில் முடித்தார். அதன்பிறகு 1981ம் ஆண்டு தேசிய ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பேற்றார்.
அதன்பிறகு டாடா சன்ஸ் தலைவராக 1991ம் ஆண்டில் பொறுப்பேற்றார். அன்று முதல் தான் அவர் இந்தியாவில் தவிர்க்க முடியாத தொழிலதிபராக மாறிப்போனார். பல சாதனைகளையம், தொழிற்புரட்சிகளையும் நிகழ்த்த தொடங்கினார். இந்திய பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார்.
அதாவது 1998 ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் டாடா இன்டிகா கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் தயாரிப்பு என்பது ரத்தன் டாடா தலைமையில் தான் மேற்கொள்ளப்பட்டது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் கார் என்ற பெருமையை பெற்றது. அதன்பிறகு பிரிட்டிஷ் டீ கம்பெனியான Tetley-வை டாடா குழுமம் வாங்கியது. 2007 ம் ஆண்டில் கோரஸ் குழுமத்தை டாடா ஸ்டீல்ஸ் வாங்கி உலகில் 5வது பெரிய ஸ்டீல் உற்பத்தியாளர் என்ற பெருமையை பெற்றார்.
https://www.oneindia.com/elections-common/index.php
அதன்பிறகு 2008 ம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் குழுமம் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் உள்ளிட்டவற்றை ஃபோர்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. 2009ம் ஆண்டில் நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் மிகவும் விலை குறைந்த காராக இந்த காரை ரத்தன் டாடா அறிமுகம் செய்து வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அதன்பிறகு 2012 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ம் தேதி டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ரத்தன் டாடா விலகினார். ரத்தன் டாடாவின் பொறுப்புக்கு சைரஸ் மிஸ்திரி வந்தார். 1991ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை சுமார் 21 ஆண்டுகளாக டாடா குழும தலைவராக ரத்தன் டாடா இருந்தபோது அந்த நிறுவனம் அதிகளவில் லாபம் ஈட்டியது. அதுமட்டுமின்றி டாடா குழுமத்தின் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கும் விரிவடைந்தது.
இதையடுத்து மீண்டும் 2016ம் ஆண்டின் டாடா சன்ஸ் குழுமத்தின் இடைக்கால தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்று செயல்பட்டார். பிறகு 2017 ம் ஆண்டில் அந்த பொறுப்பு என்பது நடராஜன் சந்திரசேகருக்கு வழங்கப்பட்டது. தற்போது நடராஜன் சந்திரசேகர் தான் அந்த பொறுப்பில் செயல்பட்டு வருகிறார்.
மேலும் டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட டாடா ஏர்லைன்ஸை மத்திய அரசு கைப்பற்றி ஏர் இந்தியா பெயரில் இயக்கியது. அதன்பிறகு ஏர் இந்தியாவை மீண்டும் டாடா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டில் வாங்கியது. இதில் ரத்தன் டாடாவின் பங்கு மிகவும் முக்கியமானது. கையை விட்டு போன சொத்தை மீண்டும் ரத்தன் டாடா தனது முயற்சியால் திரும்ப பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் தான் உடல்நலக்குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட ரத்தன் டாடா காலமாகி உள்ளார்.தற்போது காலமாகி உள்ள ரத்தன் டாடாவின் சொத்து மதிப்பு என்பது ரூ.3,800 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இவர் ஆண்டுதோறும் பல நூறு கோடிகளில் மற்றவர்களுக்கு உதவிகள் செய்தது போக ரூ.3,800 கோடி சொத்தை சேர்த்து உள்ளார்.
அதுமட்டுமின்றி டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டில், டாடா பவர், டைட்டன், டாடா ப்ராஜெக்ட்ஸ், ஏர் இந்தியா விமானம், இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி, டாடா கன்சூமர் ப்ராடெக்ஸ்ட், வோல்டாஸ் (Voltas), டிரெண்ட் (Trent), குரோமா, ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிக்பாஸ்கெட், டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்ஸ் சர்வீஸ் என்ற ஐடி நிறுவனம் உள்ளிட்டவை இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications