Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இடிக்குதே".. பிரகாஷ்ராஜுக்கு அங்கே என்ன வேலை..டக்கென திரும்பி பார்க்கும் பாஜக.. பரபர தேசிய அரசியல்

பிரகாஷ்ராஜ் உத்தவ் தாக்கரே கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்

Subscribe to Oneindia Tamil

மும்பை: நேற்றைய தினம் சந்திரசேகர ராவ், உத்தவ் தாக்கரே, சரத் பவாருடனான சந்திப்பு உட்பட அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் நடிகர் பிரகாஷ் ராஜும் இடம்பெற்றிருந்தது அனைவருக்கும் குழப்பத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது..

நேற்றைய தினம் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மும்பை சென்றார்.. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசினார்.. அவர் தந்த விருந்திலும் பங்கேற்றார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய தலைவர்கள் ஒன்றிணையும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.. அது தொடர்பான பேச்சுக்கள் நடந்தன.

சரத்பவார்

சரத்பவார்

சரத்பவாருடனான சந்திப்புக்கு பிறகு சந்திரசேகர ராவ் செய்தியாளர்களிடம் பேசும்போது, "புதிய திட்டங்கள் மற்றும் கனவுகளுடன் இந்தியா முறையாக நடத்தப்பட வேண்டும்... இதுகுறித்து சரத் பவாரிடம் பேசினேன். அவர் அனுபவம் வாய்ந்தவர். என்னை ஆசீர்வதித்தார். நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். விரைவில் ஒத்த சிந்தனையுடைய மற்ற கட்சிகளுடனான சந்திப்பும் நடைபெறும் என்றார்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

தேசிய தலைவர்களின் சந்திப்பும் சரி, அது குறித்த பேச்சுவார்த்தையும் சரி, அவர்கள் தரும் பேட்டிகளும் சரி, எல்லாமே எதிர்பாத்த ஒன்றுதான்.. அரசியலின் இயல்பான ஒன்றுதான் என்றாலும், பிரகாஷ் ராஜ் ஏன் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார்? இவருக்கு என்ன அங்கே வேலை என்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.. இத்தனைக்கும் இவர் எந்த கட்சியிலும் சேரவில்லை.. யாருக்கும் பகிரங்கமாக ஆதரவும் இதுவரை தந்ததில்லை.

 பிரகாஷ்ராஜ் பங்கேற்பு

பிரகாஷ்ராஜ் பங்கேற்பு

உத்தவ் தாக்கரேவின் அலுவல் இல்லத்தில் சந்தித்ததால், அமைச்சர்களையும் சந்திரசேகரராவ் சந்தித்தார். இந்த கூட்டத்தில் பிரகாஷ் ராஜ் பங்கேற்றிருந்தார்.. அதேபோல, கூட்டத்துக்குப் பிறகு உத்தவ் தாக்கரே, சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் ஒன்றாக சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர்.. அந்த போட்டோவிலும் நடிகர் பிரகாஷ் ராஜ் இருந்தார்.. இதற்கு பிறகு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் - சந்திரசேகர ராவ் சந்திப்புக்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் பிரகாஷ் ராஜ் கூடவே இருந்தார்.

 நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே பாஜகவை எதிர்த்து வருபவர்.. அதிலும் 2019-ல் பெங்களூரில் கவுரி லங்கேஷ் கொலைக்கு பிறகுதான் தீவிரமான அரசியலில் பிரகாஷ்ராஜ் ஈடுபட ஆரம்பித்தார்.. கவுரியின் படுகொலைக்கு பாஜகதான் காரணம் என்பதை பகிரங்கமாகவே குற்றம் சாட்டிவந்தார்... துணிச்சலாக பாஜகவை கண்டித்து ட்வீட்களை பதிவிட துவங்கினார்..

 தேசிய அரசியல்

தேசிய அரசியல்

இதற்கு பிறகு ஏராளமான எதிர்க்கட்சிகள் பிரகாஷ்ராஜை தங்கள் கட்சிகளுக்கு வர சொல்லி அழைப்பு விடுத்தன... ஆனால், அதையெல்லாம் அவர் நிராகரித்து விட்டார். சுயேட்சையாக எம்பி தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். பிரசாரத்தையும் தொடங்கினார்... மதசார்பற்ற கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். உடனடியாக வந்து ஆதரவு தந்தது ஆம் ஆத்மி கட்சி.. ஆனாலும் காங்கிரஸ் கட்சி ஆதரவு தர வேண்டும் என்று ஓபனாகவே கேட்டுக் கொண்டும், காங்கிரஸ் பிரகாஷ்ராஜ் கோரிக்கையை நிராகரித்துவிட்டது..

 பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ்

காரணம், பிரகாஷ் ராஜ் காங்கிரஸ் கட்சியில் வேண்டுமானால் சேரட்டும் என்று சொல்லிவிட்டது. அப்போது முதலே தன்னுடைய பிரச்சாரமாக இருந்தாலும் சரி, கருத்துக்களாக இருந்தாலும் சரி, பாஜகவை மட்டுமே பிரகாஷ்ராஜ் தாக்கி பேசி வருகிறார்.. இன்றைய சூழலில் தேசிய தலைவர்கள் அனைவரும் அணி திரண்டிருப்பது, பாஜகவுக்கு எதிராகத்தான் என்பதால், இந்த நிகழ்வுகளில் எல்லாம் பிரகாஷ்ராஜ் பங்கேற்றதும் அதற்காகத்தானோ என்று எண்ண தோன்றுகிறது..

ட்விஸ்ட்

ட்விஸ்ட்

பிரகாஷ்ராஜுக்கு ஆதரவு தர மறுத்த அதே காங்கிரஸ்தான் இன்றும் மம்தாவின் முயற்சிக்கு ஆதரவு தர மறுத்து வருகிறது.. என்றாலும் பிரகாஷ்ராஜ் தேசிய அரசியலில் ரீஎன்ட்ரி தந்துவிட்டது போலவே தோன்றுகிறது.. அப்படி ரீஎன்ட்ரியில் பிரகாஷ்ராஜ் நுழைந்தால், வரப்போகும் தேர்தல் பிரச்சாரங்களில் பாஜகவை சரமாரியாக விளாசி தள்ளுவார் என்றே தெரிகிறது.. என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+