ஆட்சியே கவிழ்ந்திடும்.. பெரிய சிக்கல்! தமிழரை உடனே களமிறக்கிய டெல்லி தலைமை.. இது பெரிய ட்விஸ்ட்
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கே ஆட்சி கவிழும் நிலை கூட ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தமிழர் ஒருவர் அங்கே ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
543 தொகுதிகள் கொண்ட நாடாளுமன்றத்தில் பாஜக 240 மக்களவைத் தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது. பெரும்பான்மை பெற 272 தொகுதிகள் தேவை. பாஜக பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைவாகவே உள்ளது.

என். சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் முறையே 16 மற்றும் 12 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது அரசாங்கத்தை அமைப்பதில் முக்கியமான நபர்களாக உருவெடுத்து 'கிங்மேக்கர்களாக' உள்ளனர்.அதோடு மகாராஷ்டிராவில் ஷிண்டேவின் சிவசேனா, 7, அஜித் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் 1 எம்பிக்களை ஆதரவு கொடுத்துள்ளது.
இந்த 8 எம்பிக்களும் பாஜகவிற்கு மிக அவசியம். இவர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக ஆட்சியில் நீடிக்க முடியும். இப்படிப்பட்ட நிலையில்தான் ஷிண்டே சிவசேனா தரப்பினர் சிலர் அப்படியே உத்தவ் தாக்கரே சிவசேனாவிற்கு செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் அஜித் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு திரும்ப போவதாகவும் தகவல்கள் வருகின்றன.
மகாராஷ்டிராவில் பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கே ஆட்சி கவிழும் நிலை கூட ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தமிழர் ஒருவர் அங்கே ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
நேற்று 9 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், அசாம், சிக்கிம், மேகாலயா மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மகாராஷ்டிரா ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஜார்க்கண்ட், தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பொறுப்புகளை கவனித்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தேசிய அளவில் பாஜக ஆட்சியை காப்பாற்றவும், மாநில அளவில் ஆட்சி கவிழாமல் இருக்கவும் மகாராஷ்டிரா அரசியல் முக்கியம். அப்படி இருக்க அங்கே ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். தெலுங்கானா ஆளுநராக விஷ்ணு தேவ் வர்மா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மற்ற ஆளுநர்கள்: பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பஞ்சாப்பிற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மண் ஆச்சாரியாவிற்கு மணிப்பூர் மாநில ஆளுநர் பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் மாநில ஆளுநராக ஹரிபாவ் கிசன்ராவ் பக்தே நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சத்தீஸ்கர் மாநில ஆளுநராக ராமன் தேகா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சி எச் விஜயசங்கர் மேகாலயா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள குலாப் சந்த் கட்டாரியாவிற்கு, சண்டிகர் துணை நிலை ஆளுநர் பொறுப்பும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். IAS அதிகாரியான கைலாசநாதன் மோடிக்கு மிகவும் நெருக்கம். மோடியுடன் மிக நெருக்கமாக பழகும் சிலரில் இவரும் ஒருவர். ஓம் பிரகாஷ் மாத்தூர் சிக்கிம் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சந்தோஷ் குமார் கங்குவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications