திருடன் உள்ளே புகுந்ததும்.. நேரடியாக சைஃப் அலிகான் மகன் அறைக்குள் நுழைய முயன்றது ஏன்? என்ன நடந்தது?
மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலி வீட்டில் கொள்ளையன் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் வசிப்பது மும்பையின் பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி ஆகும். அந்த பிரம்மாண்ட குடியிருப்பில் 4 மாடிகள் அவருக்கு சொந்தம்.
அதில் 1 மாடி முழுக்க அவரின் அலுவலகம் உள்ளது. மற்ற 3 மாடிகள் அவரின் வீடுகள். மற்ற மாடிகளில் வேறு பிரபலங்கள், பிஸ்னஸ்மேன்கள் வசிக்கின்றனர். இங்குதான் கொள்ளையன் புகுந்து கொள்ளையடிக்க முயன்று உள்ளார். கொள்ளையடிக்க முயன்ற திருடன் உள்ளே புகுந்ததும்.. நேரடியாக சைஃப் அலிகான் மகன் ஜே அறைக்குள் நுழைய முயன்றது தெரிய வந்துள்ளது. அந்த சிறுவனுக்கு 4 வயதே ஆகிறது.

அதை தடுக்கவே அந்த வீட்டு வேலைக்கார பெண் முயன்று உள்ளார். இதில்தான் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதிகாலை 3 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.. இந்த கொள்ளையை யார் செய்தது என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மொத்தமாக 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படைகள் மூலம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சைஃப் அலிகானின் வீட்டில் என்ன நடந்தது?:
1. நடிகர் சைஃப் அலிகானின் மும்பை வீட்டில் இன்று அதிகாலையில் நடந்த கொள்ளை முயற்சியில் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டார். அவர் வீட்டிற்குள் புகுந்த திருடன்.. சைஃப் அலிகானை கத்தியால் குத்தி உள்ளார்.
2. சரியாக 3 மணிக்கு சைஃப் தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தபோது, திருடன் ஒருவர் சயீஃப் வீட்டிற்குள் புகுந்து உள்ளார்.
3. அப்போது சைஃப் வீட்டு வேலைக்கார பெண் அந்த திருடன் உடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். வெளியே போ வெளியே போ என்று கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார்.
4. இந்த சத்தம் கேட்டு சைஃப் எழுந்து கீழே வந்துள்ளார். இதையடுத்து சைஃப் அலிகானும் அந்த திருடன் உடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். திருடனை தடுக்க சைஃப் அலிகான் முயன்று உள்ளார். இந்த வாக்கு வாதம் அதன்பின் கைகலப்பாக மாறி உள்ளது.
6. இந்த மோதலில் அந்த திருடன் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். மறைத்து வைத்திருந்த கத்தியை சுழற்றி சரமாரியாக அந்த திருடன் தாக்கி உள்ளார். 6 முறை தாக்கிவிட்டு சைஃப் அலிகான் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார்
7. இந்த சம்பவம் தொடர்பாக வதந்திகளை தவிர்க்குமாறும் கரீனா கபூர் தனது போஸ்டில் குறிப்பிட்டு உள்ளார். இதுவரை வெளியான தகவலின் படி சைஃப் அலி கானுக்கு நேர்ந்த காயத்தில் 2 காயங்கள் தீவிரமானது ஆழமானது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
8. இது தொடர்பாக வந்த சிசிடிவி காட்சிகளில் சைஃப் அலிகான் வீட்டிற்குள் யாரும் நுழையவில்லை என்று தெரிய வந்துள்ளது.
9. இதனால் அந்த திருடன் வீட்டிற்குள் வந்தது எப்படி என்றே தெரியவில்லை.
10. அதோடு நேரடியாக சைஃப் அலிகான் மகன் அறைக்குள் நுழைய முயன்றது ஏன்? அந்த வீட்டை முன்பே திருடன் நோட்டமிட்டாரா என்றும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications