ஆன்லைன் டேட்டிங் ஆப்பில் அறிமுகமான இளைஞர்! நெருங்கி பழகிய பெண் மருத்துவரின் நிலை என்ன?

Subscribe to Oneindia Tamil

மும்பை: டேட்டிங் செயலியில் அறிமுகமான இளைஞருடன் பழகியதால் பெண் டாக்டர் கர்ப்பம் தரித்தாராம். பின்னர் அந்த இளைஞர் தன்னை கட்டாய கருக்கலைப்பு செய்து ஏமாற்றியதாக போலீஸில் அந்த மருத்துவர் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.

மும்பையைச் சேர்ந்த 28 வயது இளம்பெண், இவர் அந்தேரியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு அவருக்கு ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் டோங்கிரியில் வசிக்கும் 27 வயது இளைஞர் அறிமுகமானாராம்.

mumbai doctor

இருவரும் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு மணிக்கணக்கில் பேசி வந்தனர். இருவரும் தினமும் பேசி வந்ததால் அந்த இளைஞரை அந்த பெண் நம்பினார். அவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் வந்தது. இதனால் அவரை அந்த பெண் மருத்துவர் தனிமையில் சந்தித்தார்.

அப்போது இருவரும் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர். இதையடுத்து அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். அப்போது அந்த இளைஞர், அந்த பெண் மருத்துவருடன் தனிமையில் இருப்பதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டாராம்.

இப்படியே அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்தித்ததால் அந்த பெண் மருத்துவர் கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த இளைஞரிடம் போய் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டாராம்.

ஆனால் அந்த இளைஞர் அதற்கு மறுத்தாராம். மேலும் அந்த குழந்தையை கலைத்துவிடுமாறு அந்த இளைஞர் தெரிவித்ததற்கு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மருத்துவர், முடியாது என மறுத்தாராம். இதனால் கோபமடைந்த அவர், தன்னிடம் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பரப்பிவிடுவேன் என மிரட்டினாராம்.

இதனால் அச்சமடைந்த அந்த பெண் மருத்துவர், கடந்த பிப்ரவரி மாதம் கருக்கலைப்பு செய்து கொண்டார். பின்னர் இளைஞர் , பெண் மருத்துவருடன் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்திக் கொண்டாராம். இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் டாக்டர், இளைஞர் குறித்து விசாரித்தாராம்.

அப்போது அந்த இளைஞருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது தெரியவந்தது. இதனால் அவர் தன்னுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் , அந்த இளைஞர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+