மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போக்கோ வழக்கில் சர்ச்சை தீர்ப்பு.. நீதிபதி புஷ்பாவுக்கு ஆணுறைகளை அனுப்பிய பெண்!

Google Oneindia Tamil News

மும்பை: போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அண்மையில் சர்ச்சைக்குரிய இரண்டு தீர்ப்புகள் வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி புஷ்பா கனேடிவாலாவுக்கு 150 ஆணுறைகளை அகமதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் உள்ள கூடுதல் நீதிபதி புஷ்பா கனேடிவாலா அளித்த தீர்ப்பில், " 12 வயது சிறுமியின் ஆடையோடு உடம்பைத் தொடுவது போக்ஸோ சட்டத்தில் பாலியல் குற்றாமாகாது. உடலோடுஉடல் தொடர்பில் இல்லை" எனத் தீர்ப்பளித்ததுடன் குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்தார்.

அதேபோல நீதிபதி புஷ்பா கனேடிவாலா அண்மையில் இன்னொரு வழக்கில் அளித்த தீர்ப்பில் " 5 சிறுமியின் கைகளைப் பற்றுவதும், பேண்ட் ஜிப்பை திறக்கச் செய்ய வைப்பதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமில்லை எனக் கூறி தண்டனை பெற்றவரை விடுவித்தார்.

தீர்ப்புகள் நிறுத்தி வைப்பு

தீர்ப்புகள் நிறுத்தி வைப்பு

இந்த இரு தீர்ப்புகளும் சமூகத்தில் பெரும் விவாதத்தை எழுப்பின. இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையமும், குழந்தைகள் உரிமை ஆணையமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இதைத்தொடர்ந்து இந்த தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதிக்கு அனுப்பினார்

நீதிபதிக்கு அனுப்பினார்

இந்நிலையில் போக்ஸோ சட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய இரு தீர்ப்புகளை வழங்கிய மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கானேடிவாலாவிற்கு அகமதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 150 ஆணுறைகளை அனுப்பி தீர்ப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எங்கெல்லாம் அனுப்பினார்

எங்கெல்லாம் அனுப்பினார்

தேவ்ஸ்ரி திரிவேதி என்பவர், நீதிபதி புஷ்பா கணேடிவாலாவின் அறை, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சின் பதிவு மற்றும் மும்பையில் உள்ள முதன்மை இருக்கை உள்ளிட்ட 12 வெவ்வேறு இடங்களுக்கு ஆணுறைகளை அனுப்பியதாக கூறினார்.

இது அநீதி

இது அநீதி

அநீதியை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நீதிபதி கணேடிவாலாவின் தீர்ப்பால் ஒரு அப்பாவி சிறுமிக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே நீதிபதி கணேடிவாலாவை இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று தேவ்ஸ்ரி திரிவேதி கூறினார்

English summary
woman from Ahmedabad claims to have sent 150 condoms to Bombay High Court additional judge Justice Pushpa V Ganediwala as a mark of protest against her recent controversial verdicts in sexual assault cases under the POCSO Act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X