வீட்டில் இருந்து வேலை...வாய்ப்பு தேடுவது 442% அதிகரிப்பு... ஆய்வில் தகவல்!!
மும்பை: வீட்டில் இருந்து வேலை செய்ய அல்லது தொலை தூரத்தில் இருந்து வேலை செய்ய தேடுதலில் ஈடுபட்டுள்ளவர்களின் சதவீதம் 44 ஆக கடந்த பிப்ரவரி முதல் ஜூலை வரை அதிகரித்து இருப்பாதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கிடைத்த வேலைக்கு செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து ஐடி போன்ற நிறுவனத்தினர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பலரும் வீட்டில் இருந்தவாறு வேலை செய்ய வாய்ப்புகளை தேடி வருகின்றனர். கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்வது தற்காலிகமானதாக இருக்கும்.

ஆனால், வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு மவுசு அதிகரித்து வருகிறது. மேலும், ஐடி, தொழில்நுட்பத்துறைகள், சுகாதாரம், மார்க்கெட்டிங், டெலிவரி ஆகிய துறைகளில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்வதால், உற்பத்தி திறன் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பதை நிறுவனங்கள் உறுதி செய்த பின்னர், வீட்டில் இருந்து வேலை செய்வதையும் அங்கீகரித்து வருகின்றன. வேலை வாய்ப்பையும் வழங்கி வருகின்றன.
வேலை தேடுபவர்களுக்கு வீட்டில் இருந்து செய்வது சவுகரியமாக இருக்கிறது என்று நம்புகின்றனர். இதனால், தற்போது பலரும் வீட்டில் இருந்து வேலை செய்வதை தேர்வு செய்து வருகின்றனர். கொரோனா போன்ற இக்கட்டான கால கட்டங்களில் தொலைதூரத்தில் இருந்து பணியாற்றினாலும், தொடர்ந்து வர்த்தகம் எந்த இடையூறும் இன்றி நடந்து வருகிறது. தொலைதூரத்தில் இருந்து திறன் இருந்தும் இதுநாள் வரை வாய்ப்புகள் பெற முடியாமல் இருந்தவர்களுக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இதுபோன்ற வேலைகள் சாதமாக இருப்பதாகவே கருத்துக்கள் எழுந்துள்ளன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications