கள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம்.. நேரில் பார்த்த சிறுவன் ஏரியில் மூழ்கடித்து கொலை.. இருவர் கைது!
மைசூரு: உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்ததால் மகன் என்றும் பாராமல் அவரை தாய், கள்ளக்காதலனுடன் இணைந்து ஏரியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுக்கா சிலுகலுபுரா கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டசாமி. இவரது மனைவி சாக்கம்மா. இவர்களுக்கு மகாதேவ பிரபு என்ற 7 வயதில் மகன் இருந்தார். அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிரபு விளையாடுவதற்காக வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நஞ்சுண்டசாமி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
[ காலம் கலி காலம் ஆகி போச்சுடா.. பொது இடத்தில் நெருக்கம்.. பதை பதைக்க வைக்கும் மாணவ ஜோடி! ]

கைப்பற்றி விசாரணை
இதையடுத்து கொள்ளேகால் போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீஸார் சிறுவனை தேடி வந்தனர். அப்போது கடந்த 10-ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள ஏரியில் ஒரு சிறுவனின் சடலம் மிதப்பதாக கொள்ளேகால் போலீஸார் விரைந்து சென்று அந்த சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

உடலில் காயம்
இதில் அச்சிறுவன் நஞ்சுண்டசாமியின் மகன் என்பது தெரியவந்தது. சிறுவன் ஏரியில் தவறி விழுந்தாரா அல்லது யாராவது கொன்று வீசிவிட்டனரா என போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சிறுவனின் உடலில் காயம் இருந்ததால் அவரை யாரோ கொலை செய்துள்ளனர் என்பது போலீஸாருக்கு தெளிவாக தெரிந்தது.

நாகராஜமூர்த்தி
இதுகுறித்து கொள்ளேக்கால் போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் சிறுவனை அதே கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ மூர்த்தி என்பவர் மோட்டார் சைக்கிளில் வைத்து அழைத்து சென்றதாக போலீஸாருக்கு துப்பு கிடைத்தது. இதையடுத்து நாகராஜ மூர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதல்
அப்போது அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார். மேலும் போலீஸார் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் நஞ்சுண்டசாமியின் மனைவி சாக்கம்மாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த நாகராஜமூர்த்திக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

அதிர்ச்சி
இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி நஞ்சுண்டசாமி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசம் அனுபவித்தனர். அப்போது பிரபு பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததால் இவர்களை பார்த்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தங்கள் தொடர்பை நஞ்சுண்டசாமியிடம் கூறிவிடுவாரோ என பயந்தனர்.

கைது
இதனால் பிரபுவை கொலை செய்ய திட்டமிட்டு நாகராஜ மூர்த்தி தனது பைக்கில் அழைத்து சென்று ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டார். சிறுவனை மீட்கும்போது இருவரும் ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications