பெண் போலீசை விரட்டி பிடித்து, கீழே தள்ளி, கன்னத்தை கடித்து அட்டூழியம்.. மிரண்டு போன நாகை

Subscribe to Oneindia Tamil

நாகை: நாகையில் பெண் காவலரின் கன்னத்தை கடித்து பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டூட்டி முடிந்து வீட்டுக்கு சென்ற பெண் போலீசை விரட்டி பிடித்து, கீழே தள்ளி, கன்னத்தை கடித்து சக போலீஸ்காரர் அட்டூழியம் செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியை சேர்ந்த காவலர் பிரவீனா. இவர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று பணியை முடித்து விட்டு நாகையில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு வந்தார்.

கன்னத்தை கடித்தார்

கன்னத்தை கடித்தார்

அப்போது அங்கு குடியிருக்கும் நாகூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சிவக்குமார்(33) , காவர் பிரவீனாவை திடீரென தடுத்து நிறுத்தி கீழே தள்ளி கன்னத்தில் கடித்து தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

போலீசார் ஷாக்

போலீசார் ஷாக்

அதனை தொடர்ந்து தப்பியோடிய பெண் காவலர் பிரவினா கடும் அதிர்ச்சி அடைந்தார். தனக்கு நேர்ந்த கொடுமையை நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் சென்று புகார் அளித்தனர். இதை கேள்விப்பட்டு போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்

வன்கொடுமை வழக்கு

வன்கொடுமை வழக்கு

அதன்பின்னர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், காவலர் சிவக்குமாரை நேரில் அழைத்து விசாரித்தனர். தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்,

நடவடிக்கை பாயும்

நடவடிக்கை பாயும்

இந்த வழக்கில் காவலர் சிவக்குமாரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். நாகையில் காவலரே பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் போலீஸ்காரர் சிவக்குமார் மீது நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+