நாகை பாஜக-திமுகவினர் திடீர் மோதல்..பாய்ந்து பாய்ந்து தாக்கிய நிர்வாகிகள்.. பதற்றம்-போலீஸ் குவிப்பு
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே திமுக-பாஜகவினர் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இருகட்சி நிர்வாகிகளும் பாய்ந்து பாய்ந்து தாக்கி கொண்டனர். இதல் பாஜகவினர் 5 பேர், திமுகவின் நகராட்சி கவுன்சிலர் உள்பட 2 பேர் என மொத்தம் 7 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருகட்சியினர் குவிந்ததால் பதற்றம் நிலவியது.
நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜேந்திரன். திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தார்.
இவர் கடந்த மாதம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து விஜேந்திரனுக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டது.

பாஜகவில் பதவி
திமுகவில் இருந்து இணைந்த ஒரு மாதத்துக்குள் விஜேந்திரனுக்கு பாஜகவில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதனால் விஜயேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் பாஜகவில் பதவி கிடைத்ததை அவர்கள் கொண்டாடினார்கள். இந்த கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக டாடா நகரில் விஜேந்திரன் ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பட்டாசு வெடித்ததில் பிரச்சனை
இந்த வேளையில் அருகே இருந்த திமுக நகராட்சி கவுன்சிலர் ஞானமணியின் மளிகை கடையில் பட்டாசு விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை ஞானமணி கண்டித்தார். மேலும் கடை பக்கத்தில் பட்டாசு வெடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பாஜகவினர் ஏற்க மறுத்துள்ளனர். இந்த வேளையில் அவருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பாஜக-திமுகவினர் கைது
இந்த வாக்குவாதம் முற்றவே கைக்கலப்பாக மாறியது. பாஜக, திமுகவினர் மோதிக்கொண்டனர். இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் பாஜக சேர்ந்த 5 பேருக்கும், திமுகவின் நகராட்சி உறுப்பினர் ஞானமணி உள்பட 2 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் நாகை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பாதுகாப்பு தீவிரம்
இருகட்சியை சேர்ந்தவர்களும் மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவில் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கரைப்பேட்டை, டாடா நகர், மருத்துவமனை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications