நாகூர் தர்ஹா சந்தனக்கூடு விழா! கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்! ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!
நாகை: இஸ்லாமியர்களின் ஆன்மிகத் தலங்களில் ஒன்றான நாகூர் தர்ஹா பெரிய கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.
இதனிடையே நாகூர் தர்ஹா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு வரும் ஜனவரி 3ஆம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.
ஆண்டுதோறும் நாகூர் தர்ஹா சந்தனக்கூடு கந்தூரி விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அங்கு திரளானோர் குவிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைத்துக்கும் ஜனவரி 3ஆம் தேதி அரசு விடுமுறை என்பது கவனிக்கத்தக்கது.
நாகூர் தர்ஹா ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்காக தமிழக அரசின் வனத்துறை சார்பில் 45 கிலோ சந்தனக்கட்டைகள் சில மாதங்களுக்கு முன்பு தான் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது.
நாகூர் தர்ஹா சந்தனக் கூடு விழாவுக்கு வருகை தருவோருக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், தர்ஹா நிர்வாக கமிட்டியும் இணைந்து ஏற்பாடு செய்து வருகிறது.
இதனிடையே கூட்டம் கட்டுக்கடங்காமல் திரளும் என்பதால் திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications