கவனீச்சிங்களா! வேளாங்கண்ணி சர்ச்சில் அண்ணாமலை.. என்ன பிரார்த்தனை தெரியுமா? அந்த வார்த்தை தான் ஹைலைட்
நாகப்பட்டினம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்டா மாவட்டங்களில் ‛என் மண்-என் மக்கள்' யாத்திரையை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று அவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார். இந்த பிரார்த்தனையின்போது தேவாலய தந்தை கூறிய விஷயத்தை கேட்டு அவர் நெகிழ்ச்சியடைந்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியை பலப்படுத்தும் பணியில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

இதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் ‛என் மண்.. என் மக்கள்' எனும் பெயரில் பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்கி நடத்தி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

இந்த பாதயாத்திரை தென்மாவட்டம், கொங்கு மாவட்டங்களில் நிறைவு பெற்றுள்ளது. பல இடங்களில் அண்ணாமலைக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் ஓட்டு சதவீதம் என்பது முந்தைய ஆண்டுகளை விட அதிகரிக்கும் என கட்சி மேலிடம் நம்புகின்றனர். இந்நிலையில் தான் தற்போது டெல்டா மாவட்டங்களில் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சர்ச்சில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரார்த்தனை செய்தார். என் மண், என் மக்கள் பாதயாத்திரையின் சட்டையை அணிந்தே அவர் சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்தார். சர்ச்சில் இருந்த போதகர்கள் அண்ணாமலையை வரவேற்று ஆசி வழங்கினர். அதன்பிறகு அண்ணாமலை அவர்களுடன் பேசி கொண்டிருந்தார்.
வேளாங்கண்ணி தேவாலயத்தில் பிரார்த்தனை செய்த போட்டோக்களை அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‛‛இன்றைய தினம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்துக்குச் சென்று, மாதாவைத் தரிசித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தேவாலயத் தந்தை அவர்களிடம் உரையாடும்போது, உத்தரகாண்ட் மாநிலச் சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட, வேளாங்கண்ணி தேவாலயத்தில், சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தியிருப்பதை அறிந்து மனம் நெகிழ்ந்தேன்.
பல நூற்றாண்டுகள் தொன்மையான வேளாங்கண்ணி ஆலயம், மத வேறுபாடுகள் இல்லாது அனைவரும் வழிபடும் தேவாலயமாக இருப்பது தமிழகத்துக்கே பெருமை. தமிழக மக்கள் அனைவரின் நலனுக்காகவும், மாதாவிடம் பிரார்த்தித்துக் கொண்டோம்'' என்றார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications