தேம்பி தேம்பி அழுத நபரை பார்த்து.. போலீசுக்கே சிரிப்பை அடக்க முடியலயாம்.. காரணம் என்னன்னு பாருங்க
நாகை: கொள்ளையடிக்க சென்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.. ஆனால், அவர் கொள்ளையடிக்கவில்லை.. எனினும் சிறைதண்டனை அனுபவித்து வருகிறார்.. எப்படி? .
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சில நாட்களுக்கு முன்பு ஒரு திருட்டு சம்பவம் நடந்தது.. பூட்டப்பட்ட வீடு உடைக்கப்பட்டு, கொள்ளை போனதாக போலீசாருக்கு தகவல் போனது.
இதனால், போலீசாரும் அந்த வீட்டிற்குள் நுழைந்து பார்த்தனர்.. கதவு திறந்தேயிருந்தது.. அதனால் நேராக உள்ளே போனார்கள்.. பணம், நகை, விலை உயர்ந்த பொருட்கள் என எல்லாவற்றையும் ஒரு பெரிய மூட்டையாக கட்டி சுவற்றோரம் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது..

பெட்ரூம்: பெட்ரூமுக்குள் நுழைந்து பார்த்தால், படுக்கையில் ஒரு இளைஞர் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தார்... படுக்கைக்கு பக்கத்திலேயே மது பாட்டில்கள் கிடந்தன.. கோழி பிரியாணி சாப்பிட்ட பொட்டலங்களும் விழுந்து கிடந்தன. போலீசார் அந்த இளைஞரை தட்டி எழுப்பி விசாரித்தார்கள்.. அவர் பெயர் சுதந்திரதிருநாதன்.. வெளியே வெயில் அதிகமாக இருந்ததால், கொள்ளையடித்துவிட்டு, வீட்டிற்குள் கொஞ்ச நேரம் தங்கி சாப்பிட்டு போகலாம் என்று நினைத்தாராம்..
அதற்காக கொள்ளையடித்து முடித்துவிட்டு, குவார்ட்டரும், கோழி பிரியாணியும் வாங்கி வந்து, சாப்பிட்டு, பெட்ரூமுக்குள் படுத்ததுமே தூங்கிவிட்டாராம்.. போலீசாரிடம் இதை வாக்குமூலமாக சுதந்திர திருநாதன் சொல்லி உள்ளார்.. இதைக் கேட்ட போலீசாரும், "சரி, வா ராஜா.. ஜெயிலில் போயி ஃப்ரீயா தூங்கலாம்" என்று சொல்லி அழைத்து சென்றார்கள்.. இப்போதும் ஒரு திருடன் சிக்கி உள்ளான். ஆனால், அவர் எதையும் திருடவில்லை என்பதுதான் ஹைலைட்டே..

ஏடிஎம் மிஷின்: நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில், கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.. இதனால் பதறியடித்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், ஏடிஎம் மையம் திறந்து கிடப்பதையும், உள்ளே இயந்திரம் உடைக்கப்பட்டு கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் மர்மநபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி, ஏடிஎம் மிஷினை கடப்பாறையால் உடைப்பது பதிவாகி இருந்தது..
ஆனால், கடப்பாறையால் மிஷினை உடைத்தும்கூட, அவரால் பணம் எடுக்க முடியாமல் போயுள்ளது.. எனவே, வழக்குப்பதிவு செய்த போலீஸார், கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைத்தனர்... இறுதியில் சம்பந்தப்பட்ட நபரையும் கைது செய்தனர்.. அவர் பெயர் விஸ்வநாதன். 25 வயதாகிறது.. ஏடிஎம் மிஷினில் கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்தனர்.. அப்போது விஸ்வநாதன் தந்த வாக்குமூலம் இதுதான்:

வாக்குமூலம்: "எனக்கு வேலை எதுவும் இல்ல சார்.. எங்கெல்லாமே அலைந்து திரிந்தேன்.. திடீர்னு சரக்கு சாப்பிடணும்போல இருந்தது.. பணத்திற்கு என்ன செய்கிறதுன்னு நினைச்சிட்டே இருந்தேன்.. அப்பதான், 24 மணி நேரம் பணம் கொடுக்கும் மிஷின்தான் இருக்கேன்னு நினைச்சேன்.. இதுக்காகவே ஒரு கடப்பாறையை எடுத்துட்டு போய், ஏடிஎம்-ஐ உடைத்தேன். ஆனா, அது சொதப்பலாகிடுச்சு.. அந்த ஏடிஎம் மிஷினை உடைக்கவே முடியல.. முதன்முதலில் திருட்டுல இறங்கினதுனால என்னவோ, முதல் திருட்டு முற்றிலும் கோணலாயிடுச்சு. நம்மால திருடக்கூட முடியவில்லையேன்னு நினைச்சு ஒரு மணிநேரம் ஏடிஎம் ரூமிலேயே உட்கார்ந்து அழுதுட்டேன் சார்" என்றார் விஸ்வநாதன்..
இதைக்கேட்டதுமே போலீசாருக்கு சிரிப்பு வந்துவிட்டது.. இந்த வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட போலீஸார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைத்தனர்.. திருடவில்லை என்றாலும், திருட்டு முயற்சியில் ஈடுபட்ட குற்றத்துக்காக விஸ்வநாதன் ஜெயிலில் உள்ளார் இப்போது....












Click it and Unblock the Notifications