அதென்ன நாகையில் தலைகீழா தொங்குது? அம்மன் கோயிலுக்குள் அதிசயம்.. பரிகார வாழை தோட்டத்தில் ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகையில் சிங்கார மீனாட்சி சுந்தரம் வாழைத் தோட்டத்தில் ஆச்சரியம் நடந்துள்ளது.. இதனால், சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமானோர் திரண்டு வருகிறார்கள். இதனால் சிங்கார மீனாட்சி சுந்தரம் வீடு எந்நேரமும் பிசியாக காணப்படுகிறது. இந்த சம்பவம் சோஷியல்மீடியாவில் வெளியாகி பலருக்கும் வியப்பையும் மலைப்பையும் தந்து கொண்டிருக்கிறது. அப்படி என்ன நடந்தது அவரது வீட்டில்?

நாகப்பட்டினத்தில் வாழை மரத்தில் தாலி கட்டி பரிகாரம் செய்வதன் மூலம் ராகு, கேது, நாக தோஷங்கள் நீங்கி திருமணத்தடை விலகி, நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கையாகும்..

Nagapattinam Nagai banana garden

வாழை தோட்டம் - பராமரிப்பு

இதற்கெனவே, திருக்குவளை அடுத்துள்ள காருகுடியில் மகா மாரியம்மன் நாகம்மன் ஆலயம் உள்ளது. இது ராகு கேது நாக தோஷம் நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது.. இந்த கோவில் வளாகத்திலேயே உள்ள தோட்டத்தில் வாழை மரங்கள் உள்ளன.. இதே பகுதியில் வசித்து வரும் சிங்கார மீனாட்சி சுந்தரம், இந்த தோட்டத்திலேயே வாழை மரங்கள் வளர்த்து பராமரித்து வருகிறார்.

திருமணத்தடை நிவர்த்திக்கு ராகு கேது நாக தோஷங்கள் நிவர்த்தி செய்ய, இங்குள்ள வாழை மரங்களில்தான் தாலி கட்டி பரிகாரம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், பரிகார நிவர்த்தி செய்யப்பட்ட ஒரு வாழை மரத்தில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது.

பரிகார வாழை மரம்

அதுவும் ஐந்து தலை நாகம் போல ஐந்து காய்களை கொண்டு வாழை உருவாகி உள்ளது.. அதுவும் வளைந்து மேல் நோக்கியவாறு இந்த அதிசய காய்கள்.. இதனை கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.. இதுதொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது.

பொதுவாக வாழை மரங்களில் இலைக்கு மேலிருந்தே குலை தள்ளுவது வழக்கமாகும்.. அதேபோல வாழைத்தார் எப்போதுமே கீழ் நோக்கியே வளர்ந்து வாழைக்காய், கனியாக மாறும்.

ஆன்மீக அதிசயம்

ஆனால் இந்த கோவிலில் உள்ள பரிகார வாழை மரத்தில், நடுவிலிருந்து குலை வெளிவர துவங்கியிருக்கிறது.. அதேபோல வாழைப்பூ, வாழைத்தார் ஆகியவை மேல் நோக்கி வளர துவங்கியிருக்கின்றன..

குறிப்பாக, 5 காய்கள் வளைந்து நெளிந்து மேல் நோக்கிய வண்ணம் இருக்கிறதாம்.. அச்சு அசல் இதை பார்ப்பதற்கு 5 தலை நாகம் போலவே, இருக்கிறதாம். அதனால்தான், இந்த அதிசய வாழை மரத்தை சுற்றுவட்டார பகுதி மக்களும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.. அத்துடன், அந்த வாழை மரத்திற்கு மஞ்சள் துணி அணிவித்தும், பூக்கள் சாற்றி வழிபாடும் மேற்கொண்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+