Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிரட்டும் போலயே.. நாகையில் எதிரொலித்த மோக்கா புயல் வேகம்.. திடீரென 500 அடி தூரம் உள்வாங்கிய கடல்!

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம் : நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மோக்கா புயல் எதிரொலியாக கடல் இரண்டாவது நாளாக உள்வாங்கியுள்ளது. சுமார் 500 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியுள்ளதால், கடலில் உள்ள சேறு வெளியே தெரிகிறது. இதனால், மீனவர்களின் படகுகள் சேற்றில் சிக்கியுள்ளன.

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த மோக்கா புயல் நேற்று மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது. போர்ட் பிளேருக்கு மேற்கே 520 கி.மீ தொலைவில் மோக்கா புயல் மையம் கொண்டுள்ளது. மே 14-ஆம் தேதி தென்கிழக்கு வங்க தேசம் - வடக்கு மியான்மர் இடையே மோக்கா புயல் கரையைக் கடக்கும், புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 175 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Sea water receding upto 500 feet distance due to mocha storm in Vedaranyam

இதற்கிடையே மோக்கா புயல் நாகையில் எதிரொலித்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோரப் பகுதியாகும். இங்கிருந்து ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேதாரண்யம் கடற்கரை முழுவதும் சேறு நிறைந்து காணப்பட்டது. அங்கு தற்போதுதான் சேறு காய்ந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வேதாரண்யம் பகுதியில் கடல் திடீரென 100 அடி தூரம் உள்வாங்கியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகள் சேற்றில் சிக்கின. படகுகளை சேறு இல்லாத கரைப் பகுதிக்கு இழுத்து கொண்டு வருவதற்கு மீனவர்கள் சிரமப்பட்டனர். டிராக்டர் மூலம் படகுகளை இழுக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

Sea water receding upto 500 feet distance due to mocha storm in Vedaranyam

இதற்கிடையே, மோக்கா புயல் காரணமாக வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், 6வது நாளாக இன்றும் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் 2வது நாளாக கடல் நீர் உள்வாங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யம் கடல் பகுதியில் அடிக்கடி கடல் உள்வாங்குவதும், கடலுக்குள் இருந்து சேறு வெளியே வருவதும் தொடர்ந்து நடக்கிறது. இதனால் கரையோரம் வலை வைத்து மீன் பிடிக்கும் மீனவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

Sea water receding upto 500 feet distance due to mocha storm in Vedaranyam

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், "வேதாரண்யத்தில் வழக்கமாக கடல் உள்வாங்கும். பின்பு சகஜ நிலைமைக்கு வரும். இது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தற்போது 500 அடி தூரம் உள்வாங்கி இருக்கிறது. இதுபோன்று அதிக தூரத்துக்கு கடல் உள்வாங்குவது அடிக்கடி நிகழாது.புயல் சின்னம் காரணமாக தற்போது கடல் சீற்றமாகவும் காணப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+