நடுக்கடலில் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. பொருட்கள் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

நாகை: நாகையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். இரும்பு கம்பியால் தாக்கி தமிழக மீனவர்களிடம் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள வலைகள், ஜிபிஎஸ் கருவிகளை பறித்து சென்றனர். கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக உயிரை பணயம் வைத்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் நிம்மதியை இலங்கை கடற்படையும் அவ்வப்போது கெடுத்து விடுகிறது.

Nagai fishermen Sri Lanka

எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி அவ்வப்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களின் பொருட்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. இலங்கை கடற்படையினரின் அத்து மீறிய செயலுக்கு தமிழக அரசும் கடும் கண்டனத்தை பதிவு செய்வதோடு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

ஒருபக்கம் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் படலம் நடந்து கொண்டு இருக்க மற்றொரு பக்கம் இலங்கை கடற்கொள்ளையர்களும் மீனவர்களை தாக்கி அவர்களின் பொருட்களை அள்ளி செல்லும் அதிர்ச்சிகர சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

நாகையை சேர்ந்த மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். வேதாரண்யம் அருகே கோடியக்கரை தென்கிழக்கு கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் 4 பேரும் மீன் பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தமிழக மீனவர்களை தாக்கியுள்ளனர்.

மேலும் தமிழக மீனவர்கள் வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள வலைகள், ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை பறித்து சென்றனர். கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் தமிழக மீனவர்கள் சிவசங்கர், செல்வா, தனசேகரன், ராஜகோபால் ஆகிய 4 பேர் காயமடைந்தனர். தற்போது அவர்கள் 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+