இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்..கத்தி முனையில் பொருட்கள் கொள்ளை
நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவரக்ள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் கத்தி முனையில் மிரட்டி ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள், மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டுழியமும் அதிகரித்துள்ளது. மீன் படிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களின் பொருட்களை கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவரக்ள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்த நெடுஞ்செழியன், ராமகிருஷ்ணன், மதியழகன், குமாரவேல் ஆகியோர் ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான பைபர் படகில் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே எட்டு நாட்டிகல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அடையாளம் தெரியாத 2 இலங்கை தமிழ் பேச தெரிந்த மீனவர்கள் வந்தனர். அவர்கள் 2 பேரும் தமிழக மீனர்வர்கள் 4 பேரையும் கத்தியை காடி மிரட்டியுள்ளனர். பின்னர் தமிழக மீனவர்களிடமிருந்த ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள், மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இனி இங்கு வரக்கூடாது என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த மாதம் இறுதியில், நாகையில் 15 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருவது மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதோடு மீனவர்களையும் தாக்கி, அவர்களிடம் இருந்து கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தும் தமிழக மீனவர்கள், இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்தி இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications